லடாக்கில் இந்தியா - சீனா இடையிலான பதற்றம் அதிகரிக்கக்கூடாது: அமெரிக்கா

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: லடாக்கில், இந்தியா - சீனா இடையிலான பதற்றம் அதிகரிக்காமல் பார்த்து கொள்வதை உறுதி செய்ய விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் டில்லி வந்து, நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின் போது, பிராந்திய
india, china, US, America, ladak, Himalayas,

வாஷிங்டன்: லடாக்கில், இந்தியா - சீனா இடையிலான பதற்றம் அதிகரிக்காமல் பார்த்து கொள்வதை உறுதி செய்ய விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் டில்லி வந்து, நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின் போது, பிராந்திய ஒத்துழைப்பு, பாதுகாப்பு தகவல் பரிமாற்றம், ஆயுத வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது : தெற்கு ஆசியாவில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிப்பதையும், தென் சீன கடலில், இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தையும் அமெரிக்கா வரவேற்கிறது. இமயமலை முதல் தென் சீன கடல் பகுதிகள் வரை சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்க ஒத்த எண்ணங்களை கொண்ட நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மலபார் கடற்பயிற்சியில் ஆஸ்திரேலியா இணைவது குறித்த இந்தியாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.


latest tamil news



இமயமலைப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போதுள்ள பிரச்னை பெரிதாகாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். ராணுவ பயிற்சி, தகவல் பரிமாற்றம், தளவாடங்கள் விற்பனை என இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். சமீப நாட்களாக இந்தியாவுடன் ராணுவ உறவு சிறப்பானதாக இருந்து வருகிறது. இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பானது 2016 முதல் வளர்ந்து வருவதுடன் தற்போது முக்கியமானதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
24-அக்-202015:21:32 IST Report Abuse
M.COM.N.K.K. எங்களுக்கு ஒரே ஒரு வருத்தம் ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் வழங்கியபோது இதுதான் உங்கள் எல்லையாகும் இதில் எந்த ஒரு நாடும் உங்களுடன் முரண்பட்டால் அந்த நாடுகளை நாங்கள் உங்களுடன் சேர்ந்து எதிர்ப்போம்.இப்படி ஒரு ஒப்பந்தத்தை செய்துவிட்டு சுதந்திரத்தை வழங்கியிருக்கலாம்.சுதந்திரத்திற்கு பிறகும் இரண்டு போக்கிரிகள் தொல்லைகொடுத்துக்கொண்டே இருந்துவந்துகொண்டிருக்கிறார்கள் ஆகவேதான் இப்படி சொல்லவேண்டிவருகிறது
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-அக்-202012:53:51 IST Report Abuse
Lion Drsekar என்றைக்குமே எல்லைக்கோடுகள் அமைதியாகத்தான் இருக்கிறது ஆனால் மக்களுக்காக நாங்களென்று ..அதுவும் தேர்தல் என்று வந்தால் ஆள்பவர்களை பதவி இழந்தவர்கள் பேசும் பேச்சு , செயல்பாடுகள், இந்த தேசத்தையே பிரிக்கும் வகையில் இருக்கிறது, இதை முதலில் மாற்றவேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
24-அக்-202014:49:37 IST Report Abuse
Dr. Suriyaஅப்போ ஆண்டவங்க போபர்ஸ் முதல் 2G வரை ஊழல் செய்யாம இருந்திருந்தால் இப்போ ஆள்பவருக்கு இந்த வாய்ப்பே கிடைத்து இருக்காது இந்த பேச்சும் வந்து இருக்காது.......
Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-அக்-202015:57:40 IST Report Abuse
Lion Drsekarசுதந்திரம் அளவுக்கு மீறி சென்றுவிட்டது . இனி கூடுமானவரை விலகி இருப்பதே நல்லது என்றநிலை,யாரும் எதுவும் செய்யப்போவது இல்லை, யாரும் திருந்தப்போவதும் இல்லை, திருத்தப்போவதும் இல்லை, மொத்தத்தில் நமக்காக இருப்பவர்கள் அனைவரும் வெளியிலசண்டைபோடுவது போட்டாலும் தங்களது வருமானத்தில் ஒற்றுமையாகவும் , கண்ணும்கருத்துமாகவும் இருப்பதால், எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான். ஓடும் வரை லாபம், வந்தே மாதரம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X