இந்த செய்தியை கேட்க
சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், திருத்தணி, நாற்றம்பள்ளியில் தலா 5 செ.மீ., மழையும், பெனுகொண்டாபுரம், ஸ்ரீபெரும்புதூரில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE