பொது செய்தி

இந்தியா

கொரோனா குறித்து ஜன.,11ம் தேதியே இந்தியாவுக்கு எச்சரிக்கை: ஆர்.டி.ஐ தகவல்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா குறித்த எச்சரிக்கையை ஜன.11ம் தேதியே இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் தெரியவந்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் இருந்து டிச.,31ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ், உலகம் முழுவதும் பரவி, ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் சரியான நேரத்தில்
CoronaVirus, Warning, RTI, WHO, Jan11, கொரோனா, வைரஸ், எச்சரிக்கை, உலக சுகாதார நிறுவனம், தகவல் அறியும் உரிமை சட்டம், ஆர்டிஐ

புதுடில்லி: கொரோனா குறித்த எச்சரிக்கையை ஜன.11ம் தேதியே இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் தெரியவந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து டிச.,31ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ், உலகம் முழுவதும் பரவி, ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடவில்லை என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் குற்றம்சாட்டின. இந்தியாவிலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜன.,17 முதல் டில்லி, மும்பை, கோல்கட்டா விமான நிலையங்களில் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகள் மட்டும் சோதனை செய்யப்பட்டனர்.


latest tamil news


அதன்பின்னர், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், படிப்படியாக மற்ற விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மார்ச் 23ம் தேதி வரையில் மொத்த வெளிநாட்டு பயணிகளில் 19 சதவீதம் பேர் மட்டுமே சோதனை செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் மூலமாக தெரியவந்தது. இந்நிலையில், கொரோனா குறித்த எச்சரிக்கை விடப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பரவி வருகிறது என்ற எச்சரிக்கையை ஜன.11ம் தேதியே இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டதாக,' ஆர்.டி.ஐ மூலம் தகவல் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhuran - chennai,இந்தியா
24-அக்-202013:53:21 IST Report Abuse
vidhuran அதுக்கு இப்போ என்ன? ஜனவரி பன்னிரண்டாம் தேதியே மருந்து கண்டு பிடிச்சு இருப்பீர்களா? உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியல அரசியல் எது இதெற்கெல்லாம் செய்யணும் என்று கூட தெரியாத ஒரு கூட்டமான எதிர்க்கட்சிகள் தலை எது வால் எது என்று புரியாத தலைவர்களை கொண்ட எதிர்க்கட்சிகள்.தன கடமை என்ன என்றுஎழுபது ஆண்டுகளுக்கு மேலாக வாழும் குடிமக்கள் (உங்களை போல) ராகுல் வந்து வீட்டிலேயே மருந்து கண்டு பிடிச்சு கொடுத்து இருப்பாரா?
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
24-அக்-202014:45:52 IST Report Abuse
Dr. Suriyaஅப்போ அதே மார்ச்சுல தப்லீக் கூட்டம் போட்டு பரப்புவது காங்கிரசு அதை ஆதரித்தது ஷாகின் பார்க் போராட்டம் இதெல்லாம் காங்கிரசு சம்பந்தம் இல்லை , செய்யலைன்னு சொல்லவாறீங்க... பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது தான் கான்-கிராஸ் வேலையோ........
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
24-அக்-202018:06:08 IST Report Abuse
vadiveluஏன் பாகிஸ்தானுக்கு சொல்ல வில்லை, அவர்கள் ஏப்ரல் ஒன்றில் இருந்துதானே ஊரடங்கை அமுல் படுத்தினார்கள்.எல்லாம் அவிங்க செய்யிற அழிச்சாட்டியம்.என்னத்த சாதிக்க போறாங்க.மக்கள் விழிப்போடு இருக்கணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X