கொரோனா குறித்து ஜன.,11ம் தேதியே இந்தியாவுக்கு எச்சரிக்கை: ஆர்.டி.ஐ தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா குறித்து ஜன.,11ம் தேதியே இந்தியாவுக்கு எச்சரிக்கை: ஆர்.டி.ஐ தகவல்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி: கொரோனா குறித்த எச்சரிக்கையை ஜன.11ம் தேதியே இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் தெரியவந்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் இருந்து டிச.,31ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ், உலகம் முழுவதும் பரவி, ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் சரியான நேரத்தில்
CoronaVirus, Warning, RTI, WHO, Jan11, கொரோனா, வைரஸ், எச்சரிக்கை, உலக சுகாதார நிறுவனம், தகவல் அறியும் உரிமை சட்டம், ஆர்டிஐ

புதுடில்லி: கொரோனா குறித்த எச்சரிக்கையை ஜன.11ம் தேதியே இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் தெரியவந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து டிச.,31ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ், உலகம் முழுவதும் பரவி, ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடவில்லை என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் குற்றம்சாட்டின. இந்தியாவிலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜன.,17 முதல் டில்லி, மும்பை, கோல்கட்டா விமான நிலையங்களில் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகள் மட்டும் சோதனை செய்யப்பட்டனர்.


latest tamil news


அதன்பின்னர், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், படிப்படியாக மற்ற விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மார்ச் 23ம் தேதி வரையில் மொத்த வெளிநாட்டு பயணிகளில் 19 சதவீதம் பேர் மட்டுமே சோதனை செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் மூலமாக தெரியவந்தது. இந்நிலையில், கொரோனா குறித்த எச்சரிக்கை விடப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பரவி வருகிறது என்ற எச்சரிக்கையை ஜன.11ம் தேதியே இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டதாக,' ஆர்.டி.ஐ மூலம் தகவல் தெரியவந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X