பொது செய்தி

இந்தியா

தவணை செலுத்தாத கடன்தாரர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான 6 மாத காலத்திற்கு கடன் தவணை செலுத்தாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலானது. இதனால், தொழில் நிறுவனங்கள் முடங்கின; ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். அதனை கருத்தில் கொண்டு கடன் தவணைகள் மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 6 மாத
Govt, InterestWaiver, Guideline, Interest, வட்டிக்கு வட்டி, தள்ளுபடி, மத்திய அரசு, கடன், தவணை

புதுடில்லி: கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான 6 மாத காலத்திற்கு கடன் தவணை செலுத்தாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலானது. இதனால், தொழில் நிறுவனங்கள் முடங்கின; ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். அதனை கருத்தில் கொண்டு கடன் தவணைகள் மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், இந்த 6 மாத காலத்திற்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்தன. இதனால், கொரோனா காலத்தில் வேலை நெருக்கடிக்கு மத்தியில் வட்டிக்கு வட்டி வசூலிப்பதால் கடன்தாரர்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.


latest tamil news



இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, கடன்பெற்றவர்களின் நலனை கருத்தில் கொண்டு ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.

இந்த புதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ், மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. வீட்டுக்கடன், சிறுகுறு தொழில் நிறுவன கடன்கள், கிரெட்டி கார்டு, கல்வி மற்றும் தனிநபர் கடன்களுக்கு கூடுதல் வட்டி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் தவணையை முறையாக செலுத்தியவர்களுக்கு கேஷ்பேக் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LetsVALUE.org - Democracy,இந்தியா
24-அக்-202021:30:45 IST Report Abuse
LetsVALUE.org அஞ்சு மாசம் கொடுத்துட்டு ஆறு மாசங்கராங்க
Rate this:
Cancel
DHESIKAN - COIMBATORE,இந்தியா
24-அக்-202016:18:47 IST Report Abuse
DHESIKAN ரொம்ப நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X