பொது செய்தி

தமிழ்நாடு

‛கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும்'

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020
Share
Advertisement
சென்னை: 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து அதிக கேள்வி கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கபடவில்லை. ஆன்லைன் வழியாகவே பாடம் நடத்தப்படும் சூழலில், அரசு சார்பில் கல்வித் தொலைக்காட்சியில் பாடம் நடத்தப்பட்டு
பள்ளிக்கல்வித்துறை, கல்வித்தொலைக்காட்சி, கேள்விகள், பொதுத்தேர்வு

இந்த செய்தியை கேட்க

சென்னை: 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து அதிக கேள்வி கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கபடவில்லை. ஆன்லைன் வழியாகவே பாடம் நடத்தப்படும் சூழலில், அரசு சார்பில் கல்வித் தொலைக்காட்சியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.


latest tamil news



அதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 போன்ற பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் படங்களிலிருந்து அதிக கேள்வி கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தும் பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் முக்கிய தலைப்புகளை மட்டும் ஆழமாக படிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X