மெகபூபா முப்தியை கைது செய்ய பாஜ., கோரிக்கை

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஸ்ரீநகர்: தேச விரோதமாக கருத்துக் கூறியுள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தியை தேசிய விரோத சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பா.ஜ., கூறியுள்ளது. மெகபூபாவின் கருத்திற்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சமீபத்தில் வீட்டுச்சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி நிருபர்களிடம்
மெகபூபா முப்தி, கைது,பாஜ,BJP, Mehbooba Mufti, Seditious Remarks,

ஸ்ரீநகர்: தேச விரோதமாக கருத்துக் கூறியுள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தியை தேசிய விரோத சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பா.ஜ., கூறியுள்ளது. மெகபூபாவின் கருத்திற்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வீட்டுச்சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி நிருபர்களிடம் கூறும்போது, எங்களின் கொடியை ஏந்த அனுமதிக்கும்போது தான், தேசிய கொடியை ஏந்துவேன். காஷ்மீர் கொடியும், அரசியல்சாசனமும் இருந்ததால் தான் தேசியக்கொடி இருந்தது. அதனால், தான் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைப்பில் இருந்தோம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய பார்லிமென்டிற்கு அதிகாரம் இல்லை. சிறப்பு சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் வரை காஷ்மீர் தேர்தலில் போட்டியிட மாட்டேன். எங்களின் சொந்த அரசியல்சாசனத்தின் கீழ் தான் தேர்தலில் போட்டியிட்டேன். அந்த அரசியல்சாசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில், எவ்வாறு போட்டியிடுவேன் எனக்கூறியிருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காஷ்மீர் மாநில காங்., தலைவர் ரவீந்தரா சர்மா கூறுகையில், இதுபோன்ற கருத்துகள், சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. சகித்து கொள்ள முடியாதது. பொறுப்பற்ற முறையில் கூறப்பட்டுள்ளது. மக்களின் மனதை காயப்படுத்தியுள்ளதாக கூறினார்.


latest tamil news



மாநில பா.ஜ., தலைவர் ரவீந்தரா ரெய்னா கூறுகையில், தேசத்திற்கு விரோதமாக மெகபூபா முப்தி கூறிய கருத்துகளை கவர்னர் மனோஜ்சின்கா கவனத்தில் கொண்டு, அவரை தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தாய்நாடு, தாய்நிலம், தேசியக்கொடிக்காக ஒவ்வொரு சொட்டு ரத்தம் சிந்தி தியாகம் செய்ய தயாராக உள்ளோம். ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதனால், இங்கு ஒரு கொடி தான் இருக்கும். அது தேசியக்கொடி. காஷ்மீர் மக்களை, தூண்டிவிடக்கூடாது என, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களை எச்சரிக்கிறேன். அமைதி, இயல்புநிலை மற்றும் சகோதரத்துவத்தை கெடுக்க, யாரையும் அனுமதிக்க மாட்டோம். ஏதாவது தவறு நேர்ந்தால், அதற்கான எதிர்வினைகளை மெகபூபா சந்திப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
25-அக்-202006:06:59 IST Report Abuse
blocked user பொது மக்களுக்கு இவர்களின் உண்மை முகம் தெரியவேண்டும்... ஆகவே வெளியே விட்டு வைப்பதே சிறந்த வழி.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-அக்-202004:42:41 IST Report Abuse
J.V. Iyer பாக்கிஸ்தான் கூலிப்படையின் தலைவி இந்த மெகபூபா முப்தி. காஷ்மீரை ஆண்ட முன்னாள் முதல்வர்கள் எல்லோரும் தேச துரோகிகள். உடனே ராகுல்ஜீயுடன் நாடு கடத்தப்படவேண்டும்.
Rate this:
Cancel
Vel Murugan - Hyderabad,இந்தியா
24-அக்-202023:03:13 IST Report Abuse
Vel Murugan பாரூக் அப்துல்லா சீனா உதவியோடு சிறப்பு ஆர்டிகிள் முந்நூற்று எழுவது கொண்டுவருவேன் என்று கடந்தவாரம் சொன்னார்.இந்தவாரம் மஹபூபா எப்படி பேசுகிறார்.எதையெல்லாம் நாம் பார்த்துக்கொண்டிருப்பதால் ...என்னும் பலர் பேசுவார்கள் ..முதலில் இவர்களை சிறையில் அடைக்கவேண்டும் இல்லையெனில் நாட்டை விட்டு விரைவில் வெளியற்றவேண்டும்.பின்பு சிதம்பரம் ,திக்விஜய்சிங் இவைகளையும் தக்க தண்டனை கொடுக்கவேண்டும். இனியும் இந்திய மக்கள் குறிப்பாக இளைங்கர்கள் வேடிக்கை பார்க்கமாட்டோம். கன்யாகுமாரியிலிருந்து காஷ்மீர்வரை பெரும் போராட்டம் நடக்கும்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X