பெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிசன்கள் கோபம்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், பல இடங்களில் கழிவுநீரும் கலந்தது. குப்பைகள் அடித்து வரப்பட்டது. மாநகராட்சியின் மோசமான நிர்வாகத்தை கண்டு கோபமடைந்த நெட்டிசன்கள், மாநகராட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று(அக்.,23) கனமழை பெய்தது. இதனால், பல
பெங்களூரு, வெள்ளம், சமூகவலைதளம்

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், பல இடங்களில் கழிவுநீரும் கலந்தது. குப்பைகள் அடித்து வரப்பட்டது. மாநகராட்சியின் மோசமான நிர்வாகத்தை கண்டு கோபமடைந்த நெட்டிசன்கள், மாநகராட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


latest tamil newsகர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று(அக்.,23) கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வானிலை மைய தகவல்படி அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 13.2 மி.மீ, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 7.7 மி.மீ., எச்ஏஎல் விமான நிலையத்தில் 1.3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால், ஏராளமான சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் வெள்ளநீரில் கார்கள் இழுத்து செல்லப்பட்டன. ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்தது.


latest tamil news


Advertisement


மைசூரு, சில்க்போர்ட் சந்திப்பு, ஓசூர் சாலை, பேனர்கட்டா சாலை, பசவனகுடி, நயன்தஹல்லி, ஆர்ஆர் நகர், பிஜி சாலை, உள்ளிட்ட சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கனமழை காரணமாக சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் வெள்ளநீர் தேங்கியது. கழிவுநீரும்சேர்ந்தது. இதனால், கோபமடைந்த நெட்டிசன்கள் அதனை வீடியோ பதிவு செய்து, நகரின் மோசமான திட்டமிடல் மற்றும் சாலை கட்டமைப்பு கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கினர். இதனால், சமூக வலைதளங்களில் பெங்களூருவில் பெய்த மழை தொடர்பான படங்கள் குவிய துவங்கியது.


latest tamil news
ஒரு சில இடங்களில் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதை குறிப்பிட்ட டுவிட்டர் பயனாளர் ஒருவர், மாநகராட்சி திணறுவதாகவும், கோடை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். மற்றொருவர், பூங்கா நகரம், நீண்ட மணி நேரத்திற்கு முன்னர் குப்பைகளின் நகரமாக மாறிவிட்டது என தெரிவித்துள்ளார்.


latest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
25-அக்-202006:06:07 IST Report Abuse
Elango ஒன்றும் கனமழை அல்ல ?? (13 மீமீ). அதற்கே இந்த நிலையா ???
Rate this:
Cancel
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
24-அக்-202023:49:19 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran பல இடங்களில் பெங்களூரில் குப்பைகள் அடைத்திருப்பதால் மழை நீர் வெளியே போக வழியில்லை. இந்த அடைப்புகளால் தெருவில் தண்ணீர் நிற்கிறது. வாகனங்கள் மூழ்கின்றன.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-அக்-202021:49:04 IST Report Abuse
Ramesh Sargam பெங்களூரு மக்கள் படும் துயரங்களிலிருந்து அந்த இறைவன் தான் காப்பாற்றவேண்டும். அரசு தூங்குகிறது. என் நண்பர்களே நீங்களே மேலுள்ள படத்தை பார்த்து புரிந்துகொண்டிருப்பீர்கள். எங்கு நோக்கினும் தண்ணீர். BBMP என்று அழைக்கப்படும் மாநகர அமைப்பு ஒரு உதவியும் செய்வதில்லை. இதுபோன்று மக்களை 'தண்ணீரிலும், கண்ணீரிலும்' தவிக்க விடும் அரசுக்கு மக்கள் ஏன் வரிகட்டவேண்டும்? வாக்கு ஏன் அளிக்கவேண்டும்? இப்படிப்பட்ட பொறுப்பில்லாத ஒரு அரசு தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X