பொது செய்தி

தமிழ்நாடு

ஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், ஆறுமுகசாமி கமிஷன், பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், 2017 செப்., 15ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை முடிக்க, மூன்று மாதம் அவகாசம் தரப்பட்டது. விசாரணை முடியாததால், அவ்வப்போது அவகாசம்
ஆறுமுகசாமி_கமிஷன், பதவிகாலம், நீட்டிப்பு

இந்த செய்தியை கேட்க

சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், ஆறுமுகசாமி கமிஷன், பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், 2017 செப்., 15ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை முடிக்க, மூன்று மாதம் அவகாசம் தரப்பட்டது. விசாரணை முடியாததால், அவ்வப்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட பதவி காலம், இம்மாதம், 24ம் தேதி முடிகிறது.


latest tamil news


தற்போது, ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைக்கு தடை கோரி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், விசாரணை முடியாமல் உள்ளது. இந்நிலையில், விசாரணை கமிஷன் பதவி காலத்தை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க கோரி, விசாரணை கமிஷன் சார்பில், தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதனை ஏற்ற தமிழக அரசு, ஆறுமுகசாமி கமிஷனின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இக்கமிஷனின் பதவி காலத்தை நீட்டிப்பது இது 9வது முறையாகும்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-அக்-202010:31:45 IST Report Abuse
Lion Drsekar நீட்டித்து என்ன பயன், நம் நாடு எத்தினை கமிஷனை பார்த்திருக்கிறது, முடிவு ?? ஊடகங்கள் இல்லாத காலங்களிலேயே உலகம் முழுவதும் பேசப்பட்டது, ஊடகங்களில் கட்டப்பட்டு பேசப்படுவதும் ஒன்றுதான், யார் யார் மீது கமிஷன் போடப்பட்டதோ அவர்கள் பரம்பரை பரம்பரையாக மக்களுக்கு சேவை செய்து தங்கள் குடும்பத்துக்காக நாட்டையே கூறு போடுவது குறைந்த பாடில்லை, ஒன்று மட்டும் நன்றாக பரவலாக பேசப்படுவது மக்களை திசை திருப்பப்பவே? வந்தே மாதரம்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
25-அக்-202006:35:13 IST Report Abuse
 Muruga Vel இன்னும் நேதாஜி சுபாஷ் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி எப்படி இறந்தார்கள் என்று தெரியலியே ..
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
25-அக்-202006:03:12 IST Report Abuse
Elango தண்ட செலவு. அதுதான் எல்லோரும் ஒன்று கூடி விட்டார்கள் (ops/EPs) பிறகு எதற்காக தேவை இல்லாத செலவு. ஒன்றும் ஆகபோவது இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X