‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிங்க ராகுல்'

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து
HoshiarpurRape, Rahul, PrakashJavadekar, NirmalaSitaraman, ஹோஷியார்பூர், ராகுல், பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


latest tamil news


இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அரசியல் பயணம் மேற்கொள்வதற்கு பதிலாக ராகுல், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சோனியாவோ, ராகுலோ, பிரியங்காவோ நேரில் சென்று சந்திக்க வேண்டும்.


latest tamil news



இவர்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுகின்றனர். ஆனால் ஹத்ராஸ் போன்ற பாஜ., ஆளும் மாநிலங்களில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை புகைப்படத்திற்காக சந்திகின்றனர். தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களின் பிரச்னைகளையும் ராகுல் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kishore Kumar Chari - chennai,இந்தியா
25-அக்-202005:30:28 IST Report Abuse
Kishore Kumar Chari ராகுல் ஐஸ் ஜோக்கர் அண்ட் தெயர் போல்லோவெர்ஸ் ஆல்சோ. காங்கிரஸ் ரன்னிங் ஸ்டேட்ஸ் நெவெர் டாக் அகைன்ஸ்ட் எனி இன்சிடெண்ட்ஸ் .
Rate this:
Cancel
Rajasekaran - Singapore,சிங்கப்பூர்
25-அக்-202004:50:36 IST Report Abuse
Rajasekaran இது அரசியல். தமது கட்சி ஆட்சிசெய்யும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கண்டிப்பதால் எந்த அரசியல் பயனும் இல்லை. அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தபின்தான் அனைத்து குற்றங்களையும் பாகுபாடின்றி கண்டிக்கலாம். அதற்கு மக்கள் உதவ வேண்டும். செய்வார்களா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-அக்-202004:39:58 IST Report Abuse
J.V. Iyer பாஜக நன்றாக போட்டு சாத்துகிறார்கள். பதிலுக்கு பதில் சொன்னாலும் இவர்கள் அடங்க மாட்டார்கள். டைம் வேஸ்ட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X