கொரோனாவுக்கு பலியாகப் பழகுங்கள் என்கிறார் டிரம்ப்; ஜோ பிடன் விமர்சனம்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பைஐ கடுமையாக சாடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் நெருங்க நெருங்க பிரச்சாரத்தின் கடுமை அதிகரித்து வருகிறது.பிரசாரத்தில் பிடன் பேசியதாவது:
Biden, PresidentElections, Trump, Americans, LearningToDie, CoronaVirus, ஜோ பிடன், அதிபர், தேர்தல், டிரம்ப், அமெரிக்கர்கள், கொரோனா,

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பைஐ கடுமையாக சாடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் நெருங்க நெருங்க பிரச்சாரத்தின் கடுமை அதிகரித்து வருகிறது.

பிரசாரத்தில் பிடன் பேசியதாவது: கொரோனாவுடன் வாழ அமெரிக்கர்கள் பழகிவிட்டனர். கிட்டத்தட்ட 2 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்கர்கள், கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். டிரம்பின் நிர்வாக திறமையின்மை மற்றும் உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்காத அரசு நிர்வாகிகள் ஆகியோரது அலட்சியத்தின் காரணமாக கொரோனா மென்மேலும் பரவி வருகிறது.


latest tamil news



கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என கூறுவதைக் காட்டிலும் கொரோனாவுக்கு பலியாகப் பழகிக்கொள்ளுங்கள் என டிரம்ப் கூறுவது பொருத்தமாக இருக்கும். மக்களின் உயிரை இவ்வாறாக டிரம்ப் துச்சமாக மதிக்கிறார் என ஜோ பிடேன் தனது உரையில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
24-அக்-202019:45:22 IST Report Abuse
S. Narayanan கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை கொரோனாவுடன் பழக வேண்டும் என்று உலக சுகாதார மையமே கூறியுள்ளது. பலியாக கற்றுக்கொள்ள எந்த முட்டாளும் இது வரை கூறவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X