பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (அக்.,24) 3 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 198 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-132) மூலமாக, இன்று
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (அக்.,24) 3 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 198 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-132) மூலமாக, இன்று மட்டும் 80,237 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 94 லட்சத்து 36 ஆயிரத்து 817 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news



இன்று கொரோனா உறுதியானவர்களில், 1,711 பேர் ஆண்கள், 1,175 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,26,240 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,79,864 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,024 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 63 ஆயிரத்து 456 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 35 பேர் உயிரிழந்தனர். அதில், 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 19 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,893 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 31,787 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K RAGHAVAN - chennai,இந்தியா
25-அக்-202008:47:43 IST Report Abuse
K RAGHAVAN good news
Rate this:
Cancel
GG.RAJA - chennai,இந்தியா
25-அக்-202008:17:32 IST Report Abuse
GG.RAJA தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரள, மகாரஷ்ட்ரம் தவிர்த்த பிற மாநிலங்களிலும் பொதுவாக இந்தியாவில் கொரானாவின் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. மத்திய மாநில அரசுகளின் சிறப்பான நடவடிக்கைகள், மக்களின் ஒத்துழைப்பு இவற்றால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகி இருக்கிறது.
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
24-அக்-202022:57:07 IST Report Abuse
G.Kirubakaran பாதிப்பு குறைந்தது என்றால், சோதனை எத்தனை பேருக்கு என்று தெரிவிக்க வேண்டும்.சோதனை ஒரே எண்ணிக்கையில் செய்து, பாதிப்பு குறைந்தால் தான் நல்லது
Rate this:
sridhar - Chennai,இந்தியா
25-அக்-202009:05:04 IST Report Abuse
sridharஒரு நாளைக்கு மூவாயிரம் பேருக்கு மேல் சோதனை செய்ய கூடாது . அப்போது தான் நல்ல செய்தி கிடைக்கும்....
Rate this:
Marth - Trichy,இந்தியா
25-அக்-202009:15:05 IST Report Abuse
Marthதினம் ~80000 பிளட் சம்ப்லெஸ் சோதனை செய்கிறாரகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X