டில்லியை வீழ்த்தியது கோல்கட்டா

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அபுதாபி: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்த, கோல்கட்டா அணி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் டில்லி, கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.கோல்கட்டா அணிக்கு நிதிஷ் ராணா (81), சுனில்
டில்லியை, வீழ்த்தியது, கோல்கட்டா

அபுதாபி: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்த, கோல்கட்டா அணி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் டில்லி, கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
கோல்கட்டா அணிக்கு நிதிஷ் ராணா (81), சுனில் நரைன் (64) கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. டில்லி சார்பில் நார்ட்ஜே, ரபாடா, ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.


latest tamil news




கடின இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (47), ரிஷாப் பன்ட் (27) ஆறுதல் தர, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 135 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. கோல்கட்டா சார்பில் தமிழக 'சுழல்' வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் சாய்த்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-அக்-202004:36:08 IST Report Abuse
J.V. Iyer வாழ்த்துக்கள். CSK கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X