பேட்டரி முகக்கவசம்
கொரோனா தடுப்பில் முகக்கவசம் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவின் எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் பேட்டரியில் இயங்கும் முகக்கவசத்தை வடிவமைத்துள்ளனர். இதிலுள்ள காப்பர், 90 டிகிரி செல்சியஸ் வெப்பப்படுத்தப்பட்டு, சுவாசிக்கும் காற்று வழியாக கொரோனா நீர்த்திவலைகள் கொல்லப்படுகிறது. இது மற்ற முகக்கவசம் போல, வைரசை உள்நுழையாமல் தடுக்காமல், வைரசை முகக் கவசத்துக்குள் நுழைய விட்டு, பேட்டரி மின்சாரம் மூலம் வைரஸ் அழிக்கப்படுகிறது. இது சாதாரண துணி, என்.95 முகக்கவசத்தை விட விலை அதிகம்.
தகவல் சுரங்கம்
அமெரிக்க தேர்தல் எப்படி
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடக்கிறது. இதற்கான ஓட்டுப்பதிவு நவ., 3ல் நடக்கிறது. மக்கள் நேரடியாக அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. அதிபர் வேட்பாளர் கட்சி சார்பில் மாகாணங்களில் நிற்கும் உறுப்பினர்களுக்கு ஓட்டளிக்கின்றனர். இதில் வெற்றி பெறும் உறுப்பினர்கள் சேர்ந்து (எலக்ட்ரல் காலேஜ்) டிச., 14ல் அதிபர் வேட்பாளருக்கு ஓட்டளிக்கின்றனர். 2021 ஜன.,6ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். மொத்தமுள்ள 538 எலக்ட்ரல் ஓட்டுகளில் 270 இடங்களை பெறுபவர்கள் அதிபராக தேர்வு செய்யப் படுவர். ஜன., 20ல் புதிய அதிபர் பதவியேற்பார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE