பொது செய்தி

இந்தியா

இ.எம்.ஐ.,கட்டியவர்களுக்கு ஜாக்பாட்: திருப்பி கொடுக்க உத்தரவு

Updated : அக் 26, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : ஊரடங்கு நெருக்கடி நேரத்திலும், இ.எம்.ஐ., எனப்படும், கடனுக்கான மாதத் தவணையை முறையாக கட்டியவர்களுக்கு, 'ஜாக்பாட்' அடிக்க உள்ளது. கடன்கள் மீதான ஆறு மாத கூட்டு வட்டி கைவிடப்படுவதால், குறிப்பிட்ட தொகை, இவர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைக்க உள்ளது. இதை விரைவாக செயல்படுத்தும்படி, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலை
இ.எம்.ஐ., கட்டியவர்களுக்கு ஜாக்பாட்: குறிப்பிட்ட தொகை திரும்பக் கிடைக்கும்

புதுடில்லி : ஊரடங்கு நெருக்கடி நேரத்திலும், இ.எம்.ஐ., எனப்படும், கடனுக்கான மாதத் தவணையை முறையாக கட்டியவர்களுக்கு, 'ஜாக்பாட்' அடிக்க உள்ளது. கடன்கள் மீதான ஆறு மாத கூட்டு வட்டி கைவிடப்படுவதால், குறிப்பிட்ட தொகை, இவர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைக்க உள்ளது. இதை விரைவாக செயல்படுத்தும்படி, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மார்ச்சில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏராளமானோர் வேலை இழந்தனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு களை குறைக்கும் வகையில், மத்திய அரசு, 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது.அதன்படி, வங்கிகளில் வாங்கியுள்ள கடனுக்கான, இ.எம்.ஐ., செலுத்துவதை தள்ளி வைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.


கூட்டு வட்டி ரத்து'மார்ச், 1ம் தேதியில் இருந்து, ஆக., 31 வரை என, ஆறு மாதங்களுக்கு, இ.எம்.ஐ., செலுத்துவதை தள்ளி வைக்கலாம். அவ்வாறு செலுத்தாவிட்டாலும், என்.பி.ஏ., எனப்படும் வாராக் கடன் பட்டியலில், அது சேர்க்கப்படாது' என, அறிவிக்கப்பட்டது.இ.எம்.ஐ., என்பது, அசல் மற்றும் வட்டியைக் கணக்கிட்டு, அதை மாதத் தவணையாக பிரித்துச் செலுத்துவதை குறிக்கும்.

இந்நிலையில், இ.எம்.ஐ., சலுகை பெற்ற வர்களுக்கு, நிலுவை யில் உள்ள தொகைக்கான வட்டி மீது வட்டி வசூலிக்கப்பட்டது. ஏற்கனவே வட்டி சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதன் மீது கூட்டு வட்டி விதிக்கப்படுவதை எதிர்த்து, பல்வேறு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்கின் விசாரணையின் போது, வட்டி மீதான கூட்டு வட்டியை ரத்து செய்வதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, '2 கோடி ரூபாய் வரையிலான கடன்கள் மீது விதிக்கப்பட்ட கூட்டு வட்டி ரத்து செய்யப்படும். இதனால், வங்கி களுக்கு ஏற்படும், 6,500 கோடி ரூபாய் இழப்பை மத்திய அரசே ஏற்கும்' என, உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டது.'இந்த நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். மக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது உங்கள் கையில் தான் உள்ளது' என, சமீபத்திய விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியிருந்தது. இந்த வழக்கு, அடுத்த மாதம், 2ல், மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


ஊக்கத் தொகைஇந்நிலையில், கூட்டு வட்டி ரத்து தொடர்பாக, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய நிதித் துறையின் கீழுள்ள, நிதிச் சேவை துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:இ.எம்.ஐ., ஒத்திவைப்பு அளிக்கப்பட்ட ஆறு மாதத்தில், அந்த சலுகையைப் பயன்படுத்தியோரின் கடன் மீது விதிக்கப்பட்டுள்ள, கூட்டு வட்டியை ரத்து செய்து, வித்தியாச தொகையை, அவர்களது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இதன்பின், அந்த தொகையை, மத்திய அரசிடம் இருந்து, சம்பந்தப்பட்ட வங்கிகள் கோரலாம்.

இந்த ஆறு மாதங்களில், இ.எம்.ஐ., ஒத்திவைப்பு சலுகையை பயன்படுத்தாத, அதாவது, முறையாக செலுத்தியோருக்கும் இந்த சலுகை பொருந்தும்.இதன்படி, கூட்டு வட்டி மற்றும் சாதாரண வட்டிக்கு இடையே உள்ள வித்தியாச தொகையை, அவர்களுக்கு ஊக்கத் தொகையாக கொடுக்க வேண்டும்.இந்தாண்டு, பிப்., 29ம் தேதி நிலவரப்படி, என்.பி.ஏ., எனப்படும் வாராக் கடனாக மாறாத கடன்களுக்கு, இந்த சலுகையை அளிக்க வேண்டும்.இந்த சலுகை திட்டம், வீட்டுக் கடன், கல்விக் கடன், கிரெடிட் கார்டு நிலுவை, வாகனக் கடன், எம்.எஸ்.எம்.இ., எனப்படும் குறு, சிறு, மத்திய தொழில் நிறுவனங்களுக்கான கடன், நுகர்வு கடன், குடும்ப அத்தியாவசியப் பொருட்கள் வாங்கு வதற்கான கடன் ஆகியவற்றுக்கு பொருந்தும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிப்பயல் - kumbakonam,இந்தியா
25-அக்-202013:16:57 IST Report Abuse
மணிப்பயல் பணம் கட்ட வக்கில்லாம கோரோனோ ஊரடங்குல சிக்கிய ஏழை மக்களுக்கு சலுகை கொடுங்க முதல்ல. கோரோனோ காலத்திலேயும் கட்டினவனுக்குத்தான் ஜாக்பாட் ன்னா பணக்காரன் க்கு மட்டும்தான் கிடைக்கும்.
Rate this:
Cancel
Dr.P.Manivannan - Karur,இந்தியா
25-அக்-202012:34:59 IST Report Abuse
Dr.P.Manivannan தலைப்பு பிஜேபிக்கு கொடி துக்குவது போல் தெரிகிறது. உச்சநீதிமன்றம் உத்தரவை RBI செயல்படுத்து. இதில் என்ன பெருமை அரசுக்கு.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
25-அக்-202015:29:15 IST Report Abuse
madhavan rajanஅதற்கு அரசும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அரசிடம் கருத்து கேட்காமல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை....
Rate this:
Cancel
Balam - Chennai,இந்தியா
25-அக்-202011:58:14 IST Report Abuse
Balam Where is the jackpot?...One of the biggest blunder made by RBI and central government and they r paying the price which will increase the deficit and eventually this money will be compensated by increasing taxes in other commodities. On March, when this announcement came, everyone including financial analyst asked for clarification whether the moratorium is a Stop and resume scheme or not? That time itself everyone mentioned this scheme will backfire and his head weight run govenor didn't even bother to listen.... In another 3 years, their will be another case where 3lakhs crores of MSME scheme will bubble..
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
25-அக்-202020:41:50 IST Report Abuse
EllammanWell Said...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X