பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகளில் தற்போது மூன்று பேர்களுக்கு ஒரே நேரத்தில் இன்று திருமணம் நடந்தது. இது குறித்து கூறப்படுவதாவது: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நன்னத்துகாவு என்ற பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். இவரது மனைவி ரமா தேவி. கடந்த 1995 ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ம் தேதி ரமாதேவிக்கு ஒரே பிரசவத்தில் நான்கு பெண்கள் ஒரு
கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகளில் தற்போது மூன்று பேர்களுக்கு ஒரே நேரத்தில் இன்று திருமணம் நடந்தது.

இது குறித்து கூறப்படுவதாவது: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நன்னத்துகாவு என்ற பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். இவரது மனைவி ரமா தேவி. கடந்த 1995 ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ம் தேதி ரமாதேவிக்கு ஒரே பிரசவத்தில் நான்கு பெண்கள் ஒரு ஆண் என ஐந்து பேர் பிறந்தனர். கேரளாவின் உத்ர மாதத்தில் குழந்தைகள் பிறந்ததால் அவர்களுக்கு உத்தாரா, உத்தமா, உத்ரா, உத்ரஜா, மற்றும் உத்ராஜன் என பெயரிடப்பட்டது. மேலும் மாநிலத்தின் அனைத்து பத்திகைகளிலும் பரபரப்பான செய்தியாக அப்போது வெளிவந்தது. அதுமட்டுமல்லாது இக்குழந்தைகளுக்கு பஞ்சரத்னம் எனபெயரிட்டது.


latest tamil news



கடந்த 2005 ம் ஆண்டில் பிரேம் குமார் தற்கொலை செய்து கொண்ட பின்னர் ரமா தேவிக்கு உள்ளளூர் மக்கள் ஆதரவு அளித்தனர் குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு குடியிருக்க வீடு கட்டிதரப்பட்டு அந்தவீட்டிற்கு பஞ்சரத்னம் என் பெயரிடப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க தனியார் கல்வி நிறுவனம் முன்வந்தது. இதன் மூலம் குழந்தைகள் கல்வி முதல் அனைத்து துறைகளிலும் வெற்றி வாகை சூடினர்.

தற்போது 25 வயது பூர்த்தியாக உள்ள நிலையில் அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. ஆடைவடிவமைப்பாளரான உத்ரா மஸ்கட்டில் ஓட்டல் மேனேஜராக பணி புரிந்து வரும் அஜித்குமாரையும், ஆன்லைன் பத்திரிகையாளரான உத்தாரா வீடியோ பத்திரிகையாளர் கே.பி.மகேஷ்குமாரையும், மயக்கவியல் தொழில் நுட்ப வல்லுநராக உள்ள உத்தமா மஸ்கட்டில் கணக்காளராக உள்ள வினித்தை திருமணம் செய்து கொண்டனர். நான்காவது மகளுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.ஆனால் மணமகன் வெளிநாட்டில் மாட்டிக் கொண்டதால் அவருடைய திருமணம் பிறகு நடைபெறும் என ரமா தேவி கூறினார்.

கிருஷ்ணரின் தீவிர பக்தையான ரமாதேவியின் விருப்பப்படி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணவிழாவில் உத்ரஜா, உத்ராஜன்மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரிகைகளும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தின. திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
25-அக்-202013:53:38 IST Report Abuse
S. Narayanan உண்மையிலேயே கடவுளின் ஆசி இருப்பதால்தான் இந்த அளவு முன்னேறி இருக்கிறார்கள் மற்ற இருவருக்கும் நல்ல காலம் பிறக்க வாழ்த்துக்கள்..
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
25-அக்-202010:41:15 IST Report Abuse
Karthik தங்களுக்கு கடவுளின் ஆசி என்றும் நிறைந்திருக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
Raman - abudhabi,இந்தியா
25-அக்-202009:58:53 IST Report Abuse
Raman நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X