பொது செய்தி

தமிழ்நாடு

13 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : வடகிழக்கு பருவ மழை, வரும், 28ம் தேதி துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில் நாளை முதல் மூன்றுநாட்களுக்கு, தெற்கு மற்றும் டெல்டா என, 13 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால், 13 மாவட்ட மக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில், தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஜூன், 1ல் துவங்கிய மழை,
13 மாவட்டங்கள், கன மழை எச்சரிக்கை

சென்னை : வடகிழக்கு பருவ மழை, வரும், 28ம் தேதி துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில் நாளை முதல் மூன்றுநாட்களுக்கு, தெற்கு மற்றும் டெல்டா என, 13 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால், 13 மாவட்ட மக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஜூன், 1ல் துவங்கிய மழை, தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், இயல்பை விட அதிக அளவுக்கு பெய்தது.


திசை மாற்றம்



இறுதி கட்டமாக, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மழை தீவிரம் அடைந்துள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள், தென்மேற்கு பருவமழை முடிந்து, வரும், 28ல், வடகிழக்கு பருவ மழை துவங்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. அவ்வப்போது ஏற்படும் காற்றின் திசை மாற்றம், வளி மண்டல சுழற்சி காரணமாக, ஆங்காங்கே திடீர் மழை பெய்து வருவதாக, சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் ஜெனரல் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளை முதல் மூன்று நாட்கள், தமிழகத்தின், 13 மாவட்டங்களில், இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
வளி மண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, வட மாவட்டங்களில், குறிப்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கரூர், கடலுார், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், இன்று காலை வரை, மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.நாளை முதல் மூன்று நாட்களுக்கு, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளது.

அதாவது, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாத புரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில், 28ம் தேதி வரை, இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 34; குறைந்தபட்சம், 26 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.

மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, நாளை வரை, அந்த பகுதி களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள, 13 மாவட்டங்களின் கலெக்டர் களுக்கு, பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக, எச்சரிக்கை தகவல்களை, தமிழக வருவாய் துறை அனுப்பியுள்ளது.


மழை நிலவரம்



நேற்று காலை நிலவரப்படி, திருத்தணி, நாட்றாம்பள்ளியில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. பெனுகொண்டாபுரம், ஸ்ரீபெரும்புதுார், 4; அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவாலங்காடு, செங்குன்றம், 3; ஆம்பூர், தேன்கனிக்கோட்டையில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
25-அக்-202007:44:48 IST Report Abuse
blocked user தூர் வாரினார்களா அல்லது டெக்கினக்கலாக வாரினார்களா என்பது தெரிந்துவிடும்.
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
25-அக்-202003:55:42 IST Report Abuse
Palanisamy Sekar மக்களே பார்த்து சூதானமாக இருங்க. இயற்கையை வெல்ல முடியாது. பாதுகாப்பாக இருங்கள். இல்லையேல் இதையும் கூட வைத்து தீயசக்திகள் அரசியல் செய்திடும். நல்ல அரசாங்கம் இருக்கின்றது கவலையே வேண்டாம் பாதிப்புக்கு உள்ளாக நேர்ந்தால் அம்மாவின் அரசு துணை நிற்கும். மத்திய அரசும் நல்லவர்கள் நிறைந்த அரசுதான். அதனால் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டுவோம் இறைவனை. இயற்கை நம்மோடு துணை நிற்கும்.நிச்சயமாக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X