அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் செய்வதை ஸ்டாலின் ஒப்புக்கொள்கிறார்:ஜெயகுமார்

Updated : அக் 26, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை : ''மருத்துவ கல்வி இட ஒதுக்கீடு விவகாரத்தில், அரசுக்கும், முதல்வருக்கும் நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.அவரது பேட்டி:அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ கல்வியில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, கவர்னரை சந்தித்தோம். இப்பிரச்னையில் நல்ல
 அரசியல் செய்வதை ஒப்புக்கொள்கிறார்:
ஜெயகுமார்

சென்னை : ''மருத்துவ கல்வி இட ஒதுக்கீடு விவகாரத்தில், அரசுக்கும், முதல்வருக்கும் நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

அவரது பேட்டி:

அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ கல்வியில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, கவர்னரை சந்தித்தோம். இப்பிரச்னையில் நல்ல முடிவு எடுப்பதாக அவர் கூறியுள்ளார்; கால அவகாசம் கேட்டுள்ளார். இதனால், அரசுக்கும், முதல்வருக்கும் நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். வெண்ணை திரண்டு வரும் நேரத்தில், நாங்கள் சொல்லித் தான் வந்தது என, பெயர் எடுப்பதற்கான நாடகம் இது.


தி.மு.க.,வை பொறுத்தவரை, இது தொடர்பாக சட்டசபையில் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அ.தி.மு.க., அரசு தான் இந்த சட்டத்தை கொண்டு வந்தது.'அரசியல் செய்யாமல், அவியலா செய்ய முடியும்' என ஸ்டாலின் கேட்கிறார். இப்பிரச்னையில், அவர் அரசியல் செய்வதை, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். யாரும் சாப்பிட முடியாத அவியல் கட்சியாக, தி.மு.க., உள்ளது.

மத்தியில், 17 ஆண்டுகள் அங்கம் வகித்தபோது, கவர்னர் பதவியை நீக்க, தி.மு.க., ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.உலகம் தோன்றியது முதலே, சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு உள்ளது. பெண்களை போற்ற வேண்டும்; துாற்றக்கூடாது. பெண்களை இழிவாக பேசியதால், திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரது நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மனுநீதி என்பது ஒருவர் எழுதியது. அதை வைத்து பெண்களை கேவலப்படுத்துவதை ஏற்க முடியாது.இவ்வாறு, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gayathri - coimbatore,இந்தியா
26-அக்-202010:09:13 IST Report Abuse
gayathri என்னுடைய ஒரே பதிவு. இங்கு கருத்து எழுதுபவர்கள் எல்லோருமே நியாயமான, நேர்மையானவர்களா என்பதை அவர்களின் மன்சாட்சியிடம் கேட்டு நல்லவர் என்றால் கருத்து eluthaalaame
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
25-அக்-202018:39:44 IST Report Abuse
Anantharaman Srinivasan திமுக அரசியில் கட்சி. ஓவரா சில நேரங்களில் அரசியல் செய்கிறார்கள். அதிமுக ஆடுகள் மந்தைபோல் அடிமைகளாக வளர்க்கப்பட்ட கட்சி. ஜெ... இருந்தவரை ...உண்டு என்றால் உண்டு..இல்லை என்றால் இல்லை என்றால் இல்லை பதவி.. சொந்த மூச்சை விடக்கூட பயம்...
Rate this:
SKANDH - Chennai,இந்தியா
26-அக்-202011:21:30 IST Report Abuse
SKANDH இடப்படியார் REPOBSIBLE ஸ்திரமாக ஆட்சியை கொடுத்துவிட்டார், நாட்டுக்கு செலவு வைக்காமல்.EDAPPADIAR தன்னோட தலைமையை நிரூபித்துவிட்டார். மிக நல்லாட்சியை கொடுக்கிறார். மறுபடியும் வருவார் ஆட்சிக்கு . பிறகு அவரைப்பற்றிய கருத்து தெரிவிப்போம்....
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-அக்-202016:36:41 IST Report Abuse
skv srinivasankrishnaveni அரசியலிலே ஏவாளும் உத்தமன் காந்தியே இல்லீயே அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி முக என்ன கோடீஸ்வரனா சசிகலா இன்று இவ்ளோ ஆட்டம் போட்டுண்டுருக்காளே வீட்டுக்குவீடு வீடியோ தான் சப்லை பண்ணா எப்படியா அவளுக்கு இவ்ளோ ஆயிரம் கொடிகள் சேர்ந்தன ??/அரசியல்பேசும் நீரென்ன பலகோடிகளோடவேதான் அதிமுகளே இருக்கே ஆரம்பாமலேந்து எம்ஜி ஆர் சினிமாலே நடிச்சாரு கைலே துட்டுஇருந்துது திமுகவின் கணக்குக்கெட்டாக வெளியே துரத்தினார் முக மு க சுடாலின் எவ்ளோ கஷ்டம்பாட்டு சம்பாதிச்சாங்க இவ்ளோகொடிகளை வச்சுண்டு உண்மையான ஒரே அரசியல் வாதி நம்ப மோடிஜி மட்டுமேதான் பிஜேபி லே உங்களரெண்டுகாட்ச்சிகளைப்போல காசு எவனுக்கும் இல்லீங்களே ஒத்துக்க ரெடியா இருக்கீங்களா எல்லாரும் திமுக அதிமுக மாற்று இந்தியாலே எல்லா காட்ச்சிக்காரனும் பிராடுகளேதான் பணம்கே அடிமையேதான்
Rate this:
SKANDH - Chennai,இந்தியா
26-அக்-202011:25:51 IST Report Abuse
SKANDH பிஜேபி க்கு தமிழ்நாட்டில் இப்போ சான்ஸ் இல்லை, சண்டைபோட்டு குரங்கிடம் ஆட்சியை கொடுப்பதை விட. நல்லவர் EDAPPADIARE 2021இல் ஆட்சிக்கு வரட்டும் ஆளட்டும் இன்னொருமுறை. சரியில்லை எனில் பிறகு மாற்று வோம். இப்போதைய தேவை DMK ஒழியனும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X