அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்': ஸ்டாலின்

Updated : அக் 26, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement
சென்னை : ''அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில், அரசியல் செய்யாமல், பின்னே என்ன அவியலா செய்வோம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கிண்டலாக கூறினார். மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்காததையும், அ.தி.மு.க., அரசு அழுத்தம் தர தவறியதையும் கண்டித்து, சென்னையில், நேற்று கவர்னர்
'அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்': ஸ்டாலின்

சென்னை : ''அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில், அரசியல் செய்யாமல், பின்னே என்ன அவியலா செய்வோம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கிண்டலாக கூறினார்.

மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்காததையும், அ.தி.மு.க., அரசு அழுத்தம் தர தவறியதையும் கண்டித்து, சென்னையில், நேற்று கவர்னர் மாளிகை முன், தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து, ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம்; அதில், முழுமையாக வெற்றி பெறுவோம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு, கவர்னரை ஒப்புதல் கொடுக்க வைக்க, என்னென்ன வழி உண்டோ, அத்தனையையும், தி.மு.க., மேற்கொள்ளும். இதில், ஸ்டாலின் அரசியல் செய்வதாக, முதல்வர் கூறுகிறார். எதிர்க்கட்சி என்றால், அரசியல் செய்யாமல், பின்னே என்ன அவியலா செய்து கொண்டிருக்கும்?
இது, முதல்கட்ட போராட்டம்; இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை, தி.மு.க., தொடர்ந்து போராட்டத்தை நடத்தும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.வழக்கு வாபஸ் பெற வேண்டும்!
ஈ.வெ.ரா.,வும், அம்பேத்கரும், காலம் காலமாக, என்ன கருத்துகளை எடுத்துச் சொல்லி, இந்த மண்ணில் விழிப்புணர்வை உருவாக்கினரோ, அந்த வரலாற்று பின்னணியை தான் திருமாவளவன் எடுத்துரைத்திருக்கிறார்.மக்கள் தொகையில் சரிபாதியாகவும், அதற்கும் கூடுதலாகவும் உள்ள பெண்களின் உரிமைகள், பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை, சனாதன, வருணாசிரம, மனுஸ்மிருதிகளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.

இதைத் தான், ஈ.வெ.ரா.,வும், அம்பேத்கரும் தங்கள் வாழ்நாள் முழுதும் பரப்புரை செய்தனர். அதுகுறித்து, திருமாவளவன் பேசியதை, திரித்துச் சொல்வதற்காக, அதை வெட்டி, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் வன்முறையை துாண்ட நினைக்கும், மதவெறி அரசியல் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை, அதற்கு நேர்மாறாக, திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்தப் பொய் வழக்கை, உடனே திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-அக்-202002:25:31 IST Report Abuse
Rajagopal அவியலுன்னு தெரியாம சொல்லிப்போட்டாருங்க. "இப்போ அவியல் செய்யத் தெரியுமான்னு யாரானேச்சும் கேட்டா என்ன செய்யிறது? அதப்பத்தி யோசிக்கலையே? யோவ் அவியல்ல என்னல்லாம்யா போடுவாங்க? சீக்கிரம் சொல்லுய்யா. உப்பு போடுவாங்களா? தண்ணி? அட அந்த தண்ணி இல்லய்யா, சாதாரண தண்ணி. ஊத்துவாங்களா? வெங்காயம்? போச்சு தெரியாம சொல்லிட்டோம். இப்ப பண்ணிகாட்டுன்னு எவனானும் சொல்லித் தொலைச்சிறப் போறான். யோவ் திருமா, ஏதாவது ஒளறு ஒடனே. எல்லார் கவனமும் அங்க திரும்பட்டும். ஒரு பிட்டு படிக்கிறதுக்கே மூச்சு வாங்குது. அவியலப் பண்ணிக்காட்டுன்னா எங்க போறது? நமக்குத் தின்னுதாம் பழக்கம். சமைச்சில்லாம் பழக்கமில்ல. நைனா சச்சிப் போயாரு. நாகு பயம்கா உந்தி" அப்புடின்னு சொடலை சொன்னாரு.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-அக்-202002:09:37 IST Report Abuse
Rajagopal கலவரம் செய்யாம கருப்பட்டியா செய்வோம்னும் சொல்லிடு அண்ணாச்சீ
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
26-அக்-202020:01:46 IST Report Abuse
Oru Indiyan Do you know the spelling of Avial, Sir?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X