டார்ஜிலிங்:இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்ல உறவையே தொடர விரும்புகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

எல்லைப் பிரச்னை நிலவும் சூழலில் சீனாவை ஒட்டியுள்ள சிக்கிம் மாநிலத்தில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்றும் நாளையும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது சீன துருப்புகளால் ஊடுருவக்கூடிய முயற்சியை தடுக்கும் வகையில், இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை அமைச்சர் பார்வையிட உள்ளார்.அதன்படி, இன்று சுக்னாவை தலைமையிடமாகக் கொண்ட கேங்டோக், கலிம்போங் மற்றும் பின்னகுரி ஆகிய மலைப்பகுதிகளில் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், டார்ஜ்லிங்கில் கலாச்சார நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

ராஜ்நாத்சிங் பேசியதாவது:இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்ல உறவை தொடர விரும்புகிறது, அதற்கான முயற்சிகளில் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். சில சமயங்களில் நமது எல்லையை பாதுகாக்க நமது வீரர்கள் வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கல்வானில் 20 ராணுவ வீரர்கள் தாய்நாட்டிற்காக தங்களை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகம் வீண் போகாது. தேசமும் அதன் எல்லைகளும் உங்களால் பாதுகாக்கப்படுகிறது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE