பெங்களூரை புரட்டி எடுத்த மழை வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்

Added : அக் 24, 2020
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடக மாநிலம், பெங்களூரில் பெய்த பலத்த மழையால், 700க்கும் அதிகமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூரின் வட பகுதி களில், நேற்று முன்தினம் இரவு முதல், பலத்த மழை பெய்தது. நேற்றும், பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், பெங்களூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஹொசகரஹள்ளி
 பெங்களூரை புரட்டி எடுத்த மழை வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்

பெங்களூரு:கர்நாடக மாநிலம், பெங்களூரில் பெய்த பலத்த மழையால், 700க்கும் அதிகமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூரின் வட பகுதி களில், நேற்று முன்தினம் இரவு முதல், பலத்த மழை பெய்தது. நேற்றும், பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், பெங்களூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஹொசகரஹள்ளி தத்தாத்ரேயா நகர் என்ற பகுதியில், தாழ்வான பகுதிகளில் உள்ள, 700க்கும் அதிகமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளுக்கு அருகிலேயே மழைநீர் கால்வாய் செல்வதால், கால்வாய் நிரம்பி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இரவு முழுதும் மக்கள் துாங்காமல், தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த பகுதியின் சுற்று வட்டார பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

ஏற்கனவே கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தொடர்ந்து கன மழையும் பெய்து வருவதால், பெங்களூரு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்ற முதல்வர் எடியூரப்பா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X