புதுடில்லி: நேபாளத்தின் பல்வேறு பகுதிகளை சீனா சட்டவிரோதமாக கபளீகரம் செய்துள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: உலகின் மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடித்துள்ள சீனா அண்டை நாடுகளின் எல்லைகளை ஆக்கரமிக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது. திபெத் நாட்டை ஆக்கிரமித்துள்ள சீனா இந்தியாவின் அருணாசல பிரதேசம் தங்களுக்கு உரியது என்று உரிமை கொண்டாடி வருகிறது. அது மட்டுல்லாது தற்போது லடாக் பகுதியிலும் புதிதாக பிரச்னையை உருவாக்கி வருகிறது.
இதனிடையே நமது நாட்டின் நீண்டகால நெருங்கிய நட்பு நாடாக திகழும் நேபாளத்திலும் தனது கைவரிசையை காட்ட துவங்கி உள்ளது சீனா. நேபாளத்தில் தற்போது கம்யூனிஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமராக கே.பி.,சர்மாஒலி உள்ளார். சீனாவிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சீனா நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தானே முன்வந்து செய்து தருகிறது.
இதனையடுத்து கடந்தசில மாதங்களுக்கு முன்னர் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய எல்லை வரை படத்தை நேபாளம் அந்நாட்டின் பார்லியில் தாக்கல் செய்ததது. இதற்கு அந்நாட்டின் எதிர்கட்சியும் இந்தியாவும் கண்டனம் தெரிவித்தது. அது முதலாக இந்தியா- நேபாளம் இடையே லேசான விரிசல் உருவாக துவங்கியது.

இது புறம் இருந்த போதிலும் சீனா எல்லையை ஒட்டி உள்ள நேபாளத்தின் டோலகா, கோர்கா, தர்ச்சுலா, ஹம்லா, சிந்துபால்கோக், சங்குவாசபா மற்றும் ரசுவா ஆகிய மாவட்ட பகுதிகளை சீனாஆக்கிரமிக்க துவங்கி உள்ளது. நேபாளத்தின் அதிகாரப்பூர்வ வரைபடம் இந்த பகுதிகளை, நேபாளத்தின் ஓரு பகுதியாக காட்டுகிறது. மேலும் ருய் கிராமம் மற்றும் டாம் ஆற்றின் பகுதியில் வசித்து வரும் மக்கள் நேபாள அரசுக்கு முறையாக வரி செலுத்தி வருகின்றனர்.
கடந்த2017 ம் ஆண்டுமுதல் சீனா திபெத் பகுதியுடன் இணைத்துள்ளது.நேபாளத்தின் ஒரு பகுதியாக இருந்த பல வீடுகள் இப்போது சீனாவால் கையகப்படுத்தப்பட்டு சீன எல்லைக்குள் இணைக்கப்பட்டுள்ளன. நேபாள நாட்டின் நான்கு எல்லை மாவட்டங்களில் சுமார் 11 இடங்கள் சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு இந்திய புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE