செய்தி சில வரிகளில்...இந்தியா

Added : அக் 24, 2020
Share
Advertisement
பட்னவிசுக்கு கொரோனாமும்பை: மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவ ருமான தேவேந்திர பட்னவிஸ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளார். கடந்த சில நாட்களில், தன்னை சந்தித்துச் சென்ற அனைவரும், பரிசோதனை செய்யும்படியும், அவர் வலியுறுத்தி உள்ளார். சிறுமி சுட்டுக்கொலைபிரோசாபாத்:
 செய்தி சில வரிகளில்...இந்தியா

பட்னவிசுக்கு கொரோனா

மும்பை: மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவ ருமான தேவேந்திர பட்னவிஸ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளார். கடந்த சில நாட்களில், தன்னை சந்தித்துச் சென்ற அனைவரும், பரிசோதனை செய்யும்படியும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

சிறுமி சுட்டுக்கொலை

பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தின் பிரோசாபாதில், 16 வயது சிறுமியை, மூன்று நபர்கள் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட மனிஷ் யாதவ், சிவ்பாலி யாதவ் மற்றும் கவுரவ் சாக் என்ற மூன்று பேரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கைதிகளை பார்க்க அனுமதி

போபால்: மத்திய பிரதேசத்தில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சிறைக் கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு, தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப் பின், அடுத்த மாதம் முதல், கைதிகளை சிறைக்குச் சென்று பார்க்க, பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மாநில அரசு, இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தது.

குழந்தையை கொன்றவருக்கு துாக்கு

ரேபரேலி: உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில், 2014ல், ஜிதேந்திர சிங் என்பவர், ஒன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றார். இந்த வழக்கு விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றவாளி ஜிதேந்திர சிங்கிற்கு, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மாஜி அமைச்சர் காலமானார்

நாசிக்: மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விநாயக்தாதா படேலுக்கு, 77, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, நாசிக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்; இவர், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாருக்கு படேல் நெருக்கமானவர்.

பீஹார் அதிகாரிகளுக்கு அறிவுரை

பாட்னா: பீஹாரில், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மாநில அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவும், இதர தேர்தல் ஆணையர்களும், நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசித்தனர். அப்போது, 'சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடை பெறவேண்டும் என்பதற்காக, மாநிலம் முழுதும் சோதனை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்' என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X