பொது செய்தி

தமிழ்நாடு

அணிவகுக்கும் பண்டிகைகள் : கடைகள் செயல்படும் நேரம் நீட்டிக்கப்படுமா?

Updated : அக் 26, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: அடுத்தடுத்து பண்டிகை காலம் என்ப தால், கூட்டம் கூடி, கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில், கடைகள் இரவு, 12:௦௦ மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என, தமிழக அரசை, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.நெரிசல் குறையும்; வர்த்தகமும் மேம்படும் என்பதால், தாமதமின்றி இதற்கான அறிவிப்பையும், வழிகாட்டு நெறிமுறைகளையும், அரசு வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு
அடுத்தடுத்து அணிவகுக்கும் பண்டிகைகள் : கடைகள், நேரம்  இரவு 12:00 வரை நீட்டிக்கப்படுமா?

சென்னை: அடுத்தடுத்து பண்டிகை காலம் என்ப தால், கூட்டம் கூடி, கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில், கடைகள் இரவு, 12:௦௦ மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என, தமிழக அரசை, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.நெரிசல் குறையும்; வர்த்தகமும் மேம்படும் என்பதால், தாமதமின்றி இதற்கான அறிவிப்பையும், வழிகாட்டு நெறிமுறைகளையும், அரசு வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில், மார்ச் முதல், கொரோனா தொற்றின் தாக்கம் உள்ளது. தொற்று பரவலை தடுக்க, முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, டீ கடைகள் முதல், வர்த்தக நிறுவனங்கள் வரை மூடப்பட்டன.பின், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை, அரசு அவ்வப்போது அறிவித்தது.அதன்படி, காலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி தரப்பட்டது. தற்போது, பண்டிகை காலம் துவங்கியுள்ளதால், கடைகள் இரவு, ௧௦:௦௦ மணி வரை செயல்பட, அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நடைமுறை, இம்மாதம், ௨௨ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.




நீட்டிப்பு தேவை



இன்று, ஆயுதபூஜை; நாளை, விஜய தசமி விழா. நேற்று விடுமுறை நாள் என்பதால், பலரும் ஜவுளி மற்றும் தேவையான பொருட்கள் வாங்கச் சென்றதால், சென்னை, தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேநிலை, மற்ற மாவட்டங்கள், முக்கிய நகரங்களிலும் காணப்பட்டது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால், வியாபார பகுதிகளில், கூட்டம் அலைமோதும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு என, அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. இதனால், ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள்விற்பனை கடைகளில், கூட்டம் அலைமோதும். வர்த்தக மையமாக திகழும், சென்னை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில், தெருக்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இதனால், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


சிரமம்



அவ்வப்போது மழையும் பெய்வதால், மக்கள் நினைத்த நேரத்தில், வீடுகளை விட்டு வெளியே வருவதிலும்சிரமம் உள்ளது. இதனால், கடைகளுக்கு சென்று, இரவு, 10:00 மணிக்குள் பொருட்கள் வாங்க முடியவில்லை.எனவே, கடைகள் செயல்படும் நேரத்தை இரவு, 12:00 மணி வரை நீட்டிக்குமாறு, பொது மக்கள், வியாபாரிகள் என, அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதைச் செய்தால், கடைகளில் கூட்டம் சேருவது தடுக்கப்படும்.

தங்களுக்கு வசதியான நேரத்தில் சென்று, மக்கள் பொருட்களை வாங்கிக் கொள்வர்.ஒரே நேரத்தில் மக்கள் நிரம்பி வழிவதும் குறையும். கொரோனா போன்ற பாதிப்புகளில் இருந்து, மக்கள் தப்ப வழி வகுக்கும்.அதற்கேற்ப, கடைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதும் கட்டாயம். கடை ஊழியர்களையும், இரண்டு, 'ஷிப்ட்' முறையில் பணிக்கு அமர்த்தலாம்.

எனவே, தமிழக அரசு, கடைகள் செயல்படும் நேரத்தை, புத்தாண்டு வரை, இரவு, 12:௦௦ மணி வரை என மாற்றி அமைத்து அறிவிப்பதுடன், அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் உடனே வெளியிட வேண்டும் என, வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-அக்-202022:35:20 IST Report Abuse
Ram Pollachi லாக் டவுன் சமயத்தில் இருந்த வியாபாரம் இப்போது இல்லை என்று பெரும் மூச்சு விடும் பலசரக்கு வியாபாரி. பேசாமல் 247 திறந்து விடுங்கள் கொரோனா வாங்கலையோ கொரோனா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X