விருதுநகர்கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் சீரியல் செட் பல்புகள் கட்டாயம் இடம் பிடிக்கும். சுவாமி, தலைவர்களின் உருவங்களை மூங்கில் பிரம்பில் அமைத்து சீரியல் செட் தயாரிப்பது விருதுநகர் அருகே பேய்குளம் தொழிலாளர்களுக்கே உரித்தான கைப்பக்குவம். கோயில் திருவிழாக்களின் போது கோயிலை சுற்றிலும் சீரியல் செட் அமைக்கப்படும். இரவில் சீரியல் செட் பல்புகள் மின்மினி பூச்சி போல் மினுமினுக்கும். இவை பார்க்க அழகாகவும், திருவிழாவை கலைகட்ட வைக்கும்.
திருமணம், புதுமனை புகு விழா, புனித நீராட்டு விழாக்களில் ‛வெல்கம்' சீரியல் செட் போர்டு கட்டாயம் இடம் பிடிக்கும்.சீரியல் செட்டில் சுவாமி, தலைவர்களின் உருவங்களை தத்ரூபமாக உருவாக்குவது சுலபமான காரியம் அல்ல. துல்லியமாக வடிவமைத்தால் மட்டுமே பல்புகள் மின்னும் போது தலைவர்களின் உருவம் தெரியும். சீரியல்செட் தயாரிப்பதில் விருதுநகர் அருகே பேய்குளம் கிராம தொழிலாளர்கள் சிலர் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர்..
..தனி மவுசு உண்டுகேரள ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிங்கம், புலி, யானை, கதகளி நாட்டிய கலைஞர், புலி வாகனத்தில் ஐயப்பன் உள்ளிட்ட சீரியல் செட் ஆர்டரின் பேரில் மூங்கில் சிம்பு, தப்பையில் தயாரித்து கொடுக்கிறோம். தமிழகத்தில் நடக்கும் கோயில் விழாக்களில் பேய்குளம் சீரியல் செட்டிற்கு தனி மவுசு உண்டு. சீரியல் செட் அமைப்புகளை நிழலில் வைத்து பாதுகாத்தால் பல ஆண்டுகள் உழைக்கும்.- பாண்டி, தயாரிப்பாளர், பேய்குளம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE