தேசிய கொடி பற்றி அவதூறு பேச்சு: மெஹபூபா மீது பாயுமா வழக்கு?

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஜம்மு : தேசியக் கொடி குறித்து அவதுாறாக பேசிய மெஹபூபா முப்தியை, தேசத் துரோக வழக்கில் கைது செய்ய, பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது, ஜம்மு - காஷ்மீர் அரசியல் தலைவர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தேசிய கொடி பற்றி அவதுாறு பேச்சு  மெஹபூபா மீது பாயுமா வழக்கு?

ஜம்மு : தேசியக் கொடி குறித்து அவதுாறாக பேசிய மெஹபூபா முப்தியை, தேசத் துரோக வழக்கில் கைது செய்ய, பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது, ஜம்மு - காஷ்மீர் அரசியல் தலைவர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.


கண்டனம்



latest tamil news



இதைத் தொடர்ந்து, 14 மாதங்களுக்குப் பின், முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி, சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் மெஹபூபா முப்தி, முதன்முறையாக, நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்தின் கீழ் வழங்கப்பட்டிருந்த மாநிலக் கொடி மீட்கப்பட்டால் தான், இங்கு தேசியக் கொடி ஏற்றப்படும். அதன்பின் தான் தேசியக் கொடியை கையில் எடுப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

அவரது இந்த பேச்சுக்கு, பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து, ஜம்மு - காஷ்மீர், பா.ஜ., தலைவர் ரவீந்தர் ரைனா கூறியதாவது:தேசத் துரோக கருத்துக்களை வெளியிட்ட மெஹபூபா முப்தி மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசத் துரோக வழக்கில், அவரை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும்.


போராட்டம்



ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இங்கு, ஒரே ஒரு கொடியை மட்டுமே ஏற்ற முடியும்; அதுவே நம் தேசியக் கொடி.காஷ்மீர் மக்களை துாண்டும் வகையில் செயல்படும் முப்தி உள்ளிட்ட தலைவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன். அமைதி, இயல்பு நிலை மற்றும் சகோதரத்துவத்தை சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

தவறாக எதுவும் நடந்தால், அதற்கான விளைவை, முப்தி சந்திக்க நேரிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, மெஹபூபா பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஜம்முவில், பா.ஜ., மற்றும் சிவசேனா டொக்ரா உள்ளிட்ட கட்சியினர், நேற்று போராட்டம் நடத்தினர்.


போராட வேண்டிய நேரமிது!



ஜம்மு - காஷ்மீரில், மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. காஷ்மீரி மக்கள் மட்டுமல்லாமல், விவசாயிகளும், தலித்துகளும் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. சிறப்பு அந்தஸ்தை மீட்க, காஷ்மீர் தலைவர்கள், போராடவேண்டிய நேரம் வந்துவிட்டது.மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
25-அக்-202010:32:48 IST Report Abuse
Madhusoodhana Ramachandran இவர் போட்ட ட்ராமாவினால் தீவிர வாதிகளை விடுவித்தது இந்தியா அரசாங்கம். திருட்டு கூட்டம்.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
25-அக்-202010:30:25 IST Report Abuse
பாமரன் மெஹபூபா பேசியது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றம்.. மத்திய அரசின் கீழ் இயங்கும் காஷ்மீர் காவல் துறை நடவடிக்கை எடுத்தால் உண்மை இந்தியர்கள் அனைவரும் பாராட்டுவோம்...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-அக்-202010:28:22 IST Report Abuse
Lion Drsekar அவதூறு, அநாகரீகம், அத்துமீறல், எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு பொருந்தாது, சட்டம் என்பது பாமரர்களுக்கு மட்டுமே, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X