துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய பஞ்சாப் அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், பஞ்சாப் அணிகள் மோதின. ஐதராபாத் அணியில் ஷபாஸ் நதீம் நீக்கப்பட்டு கலீல் அகமது சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், ஜிம்மி நீஷாம் ஆகியோருக்கு பதிலாக மன்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான் தேர்வாகினர். 'டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணிக்கு நிக்கோலஸ் பூரன் (32*), கேப்டன் லோகேஷ் ராகுல் (27), கெய்ல் (20) கைகொடுக்க, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் சார்பில் சந்தீப் சர்மா, ஹோல்டர், ரஷித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர் (35), விஜய் சங்கர் (26) மட்டும் ஆறுதல் தர, 19.5 ஓவரில் 114 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. பஞ்சாப் சார்பில் அர்ஷ்தீப் சிங், ஜோர்டான் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE