'மக்களின் வாழ்க்கை பக்கத்தில் இருக்க வேண்டும் இலக்கியம்'

Added : அக் 25, 2020
Share
Advertisement
''வட்டார மொழி இலக்கியங்களை, வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறையவில்லை,'' என்கிறார் எழுத்தாளர் குணசேகரன்.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் மணக்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் குணசேகரன். வடக்கு மாவட்ட மக்கள் பேசும் மண்வாசனை மாறாத வட்டார மொழியில் தனித்துவமான இலக்கிய படைப்புகளை தந்தவர்.நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வட்டார சொல் அகராதி என, 17 நுால்களை எழுதி
 'மக்களின் வாழ்க்கை பக்கத்தில்  இருக்க வேண்டும் இலக்கியம்'

''வட்டார மொழி இலக்கியங்களை, வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறையவில்லை,'' என்கிறார் எழுத்தாளர் குணசேகரன்.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் மணக்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் குணசேகரன். வடக்கு மாவட்ட மக்கள் பேசும் மண்வாசனை மாறாத வட்டார மொழியில் தனித்துவமான இலக்கிய படைப்புகளை தந்தவர்.நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வட்டார சொல் அகராதி என, 17 நுால்களை எழுதி இருக்கிறார். சுந்தர ராமசாமி விருது, கனடா இலக்கிய தோட்ட இயல் விருது, தமிழ் வளர்ச்சித்துறை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இப்போது, கோவை விஜயா பதிப்பகம் வாசகர் வட்டம் சார்பில், இந்த ஆண்டுக்கான கி.ரா., விருது பெறுகிறார்.''வாழ்த்துக்கள்...கி.ரா.விருது பற்றி என்ன பீல் செய்கிறீர்கள்?''''தமிழில் வட்டார மொழி நடையில், மிக சிறப்பான இலக்கிய படைப்புகளை தந்தவர் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாரயணன். அவர் பெயரிலான இந்த விருது பெறுவதில் மகிழ்ச்சியாக உள்ளது.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கிய விருதை விட, உயர்ந்த விருதாக கி.ரா., பெயரில் வழங்கப்படும் இந்த விருதை கருதுகிறேன்,''''உங்களை இலக்கிய எழுத்துக்களை நோக்கி ஈர்த்தது எது?''''கவிஞர் பழமலையின் படைப்புகளை படித்துதான் இலக்கியத்துக்குள் வந்தேன். அவருடைய வட்டார எழுத்து மொழி என்னிடமும் ஒட்டிக்கொண்டது.ஒரு மொழிக்கு வளம் சேர்ப்பது, அந்த மண்ணின் வட்டார மொழி நடையில் எழுதப்படும் இலக்கியங்கள்தான். அந்த படைப்புகள் தான் ரத்தமும், சதையுமாக மக்களோடு இணைந்து இருக்கும்.நான் மக்கள் மொழியில் எழுதுகிறேன். இலக்கியம் மக்களின் வாழ்க்கை பக்கத்தில் இருக்க வேண்டும். என் எழுத்து தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்ட மக்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இருக்கிறது. இன்றைக்கு நகர வளர்ச்சி காரணமாக, அந்த மொழியும் மாறி வருகிறது,''''இன்று வட்டார மொழியில் எழுதும் எழுத்தாளர்கள் குறைந்து வருகின்றனரே...,''''உண்மைதான். ஆனால் வட்டார மொழி இலக்கியங்களை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதுதான் ஆறுதல்,'' என்று கூறி புன்னகைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X