அனைவருக்கும் இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் ஜோ பிடன் வாக்குறுதி

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
வாஷிங்டன் :''அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அனைத்து அமெரிக்கர்களுக்கும், கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவேன்,'' என, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்த மாதம், 3ல் நடக்க உள்ளது. குடியரசு கட்சியின் வேட்பாளரான, அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்த்து, ஜனநாயகக்
 
அனைவருக்கும் இலவச தடுப்பூசி
: பிரசாரத்தில் ஜோ பிடன் வாக்குறுதி

வாஷிங்டன் :''அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அனைத்து அமெரிக்கர்களுக்கும், கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவேன்,'' என, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்த மாதம், 3ல் நடக்க உள்ளது. குடியரசு கட்சியின் வேட்பாளரான, அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.


latest tamil news





மோசமான நிலைமை

இந்நிலையில், நேற்று தன் சொந்த மாகாணமான டலாவரேயில் நடந்த பிரசார கூட்டத்தில், ஜோ பிடன் பேசியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில், அதிபர் டிரம்பின் நிர்வாகம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.
இந்த வைரசுக்கு இதுவரை, 2.20 லட்சம் அமெரிக்கர்கள் உயிரிழந்து உள்ளனர்.
கொலம்பியா பல்கலையின் ஆய்வின்படி, 2.10 லட்சம் உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும் என, தெரியவந்துள்ளது.டிரம்ப் அதிபராக இருக்கும் வரை, இந்த மோசமான நிலைமை தொடரும். கொள்முதல் செய்யப்படும்நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், பாதுகாப்பான மற்றும் பலனளிக்கக் கூடிய தடுப்பூசிகளை கொள்முதல் செய்யப்படும்.
இந்த தடுப்பூசியை, அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாக வழங்குவோம். காப்பீடு செய்திருந்தாலும், செய்யாவிட்டாலும், எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவோம்.

தற்போதைய நிலையில், இந்த வைரசின் தாக்கம் எவ்வளவு நாளைக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், இதே ஒழித்துவிட்டோம் என்று டிரம்ப் கூறுவார். வைரசுக்கு எதிராக அவரிடம் எந்த உறுதியான திட்டமும் இல்லை.இவ்வாறு, அவர் பேசினார்.



உறுதி செய்துவிட்டார்!



அமெரிக்க அதிபர் பதவிக்கு, தான்சரியான தேர்வாக இருக்க மாட்டேன்என்பதை, பொது விவாதத்தின்போது, ஜோ பிடன் உறுதி செய்துவிட்டார். வைரஸ் பரவல் தொடர்பாக மக்களை பீதியில் ஆழ்த்துவதே அவரது நோக்கம். அவருக்கும், அவரை ஆதரிக்கும் இடதுசாரி பயங்கரவாதிகளுக்கும் தோல்வியை கொடுங்கள்.டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர், குடியரசு கட்சி.


பிடன் ஆதரவாளர்கள் நம்பிக்கை



ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடனுக்குஆதரவாக, அமெரிக்க வாழ் இந்தியர்களை
ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, அஜய் ஜெயின் பதூரியா கூறியுள்ளதாவது:
செனட், எம்.பி.,யாக இருந்தபோதும், துணை அதிபராக இருந்தபோதும், இந்தியாவுக்கு
ஆதரவான நிலைப்பாட்டை, ஜோ பிடன் கொண்டிருந்தார். கடைசியாக நடந்த பொது விவாதத்தின்போது, இந்தியாவுக்கு எதிராக, அதிபர், டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார்.
இதில் இருந்தே, இந்தியாவுக்கு ஆதரவாக யார் இருப்பர் என்பதை, அமெரிக்க வாழ்
இந்தியர்கள் முடிவு செய்திருப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
25-அக்-202013:48:50 IST Report Abuse
S. Narayanan தமிழ் நாட்டை காபி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
Rate this:
Cancel
mjayaps - Coimbatore,இந்தியா
25-அக்-202013:26:15 IST Report Abuse
mjayaps எங்க அண்ணா ஈபிஎஸ்ச பாத்து பிட் அடுச்சிட்டியா ...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-அக்-202012:36:25 IST Report Abuse
Ramesh Sargam தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளிவீசுவதில் அமெரிக்க அரசியல்வாதிகளும் சளைத்தவர்கள் அல்ல ஹூம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X