ராணுவ கேண்டீனில் இறக்குமதி பொருட்கள் விற்பனை செய்ய தடை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராணுவ கேண்டீனில் இறக்குமதி பொருட்கள் விற்பனை செய்ய தடை

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி: சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ராணுவ கேண்டீனில் விற்கப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புதுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து கூறப்படுவதாவது: ராணுவத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்காக வடக்கே சியாச்சின் முதல் தென்மேற்கு பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவு பகுதி வரையில் சுமார் 3,

புதுடில்லி: சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ராணுவ கேண்டீனில் விற்கப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புதுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



latest tamil news


இது குறித்து கூறப்படுவதாவது: ராணுவத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்காக வடக்கே சியாச்சின் முதல் தென்மேற்கு பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவு பகுதி வரையில் சுமார் 3, 500க்கும் மேற்பட்ட கேண்டீன்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த கேண்டீனில் சுமார் 5 ஆயிரம் வகையிலான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 2 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை நடைபெற்று வந்தது.இதில் 400 பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.இதில் மதுபான வகைகளும் அடக்கம்.


latest tamil news




மேலும் சீனாவில்இருந்து பெண்களுக்கான கைப்பைகள், லேப்டாப்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், எலக்ட்ரிக்பொருட்கள், வாக்குவம் கிளீனர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.


தற்போது ஆத்மனிர்பார் திட்டத்தின் கீழ் உள்ளூர் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உள்ளூர் பொருட்களின் விற்பனை ஊக்குவிக்கப்படும் என பாதுகாப்புதுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அரசின் உத்தரவில் எந்த பொருட்கள் தடை செய்யப்படும் என்று குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும், இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களும் தடைசெய்யப்படும் பட்டியலில் இருக்கும் என கூறப்படுகிறது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X