சீனாவுடன் ராணுவ கூட்டணி ரஷ்ய அதிபர் திடீர் அறிவிப்பு

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
மாஸ்கோ: ''சீனாவுடன் ராணுவ கூட்டணி அமைப்பது, தற்போதைக்கு அவசியமில்லை. ஆனால், எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.அமெரிக்காவுடனான, சீனா மற்றும் ரஷ்யாவின் உறவு பதற்றமான நிலையில் உள்ளது. இந்நிலையில், சீனாவும், ரஷ்யாவும் அதிகம் நெருக்கம் காட்டி வருகின்றன. அணு ஆயுதங்கள் வைத்திருப்பது

மாஸ்கோ: ''சீனாவுடன் ராணுவ கூட்டணி அமைப்பது, தற்போதைக்கு அவசியமில்லை. ஆனால், எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.



latest tamil news


அமெரிக்காவுடனான, சீனா மற்றும் ரஷ்யாவின் உறவு பதற்றமான நிலையில் உள்ளது. இந்நிலையில், சீனாவும், ரஷ்யாவும் அதிகம் நெருக்கம் காட்டி வருகின்றன. அணு ஆயுதங்கள் வைத்திருப்பது தொடர்பாக, அமெரிக்காவுடனான ரஷ்யாவின் ஒப்பந்தம் அடுத்தாண்டு முடிய உள்ளது.இதை புதுப்பிப்பது தொடர்பாக, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது தொடர்பாக, இரு நாடுகளும் பேசி வருகின்றன.இந்நிலையில், பல நாடுகளைச் சேர்ந்த, வெளியுறவுத்துறை கொள்கை நிபுணர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில். ரஷ்ய அதிபர் புடின் கலந்துரையாடினார்.


latest tamil news


அப்போது அவர் கூறியதாவது:சீனா மற்றும் ரஷ்யா இடையே ராணுவ ரீதியிலான உறவு உள்ளது. சீன ராணுவத்தின் வலிமையை அதிகரிக்க, அது உதவி உள்ளது. அதே நேரத்தில், சீனாவுடன் ராணுவக் கூட்டணி வைப்பதற்கு, தற்போதைக்கு தேவையில்லை. ஆனால், எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

அணு ஆயுதம் தொடர்பாக, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புகிறோம். ஆனால், அதில் இறுதி முடிவை அமெரிக்கா தான் எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.ரஷ்ய அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு, சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
25-அக்-202018:31:45 IST Report Abuse
Endrum Indian ஒரு சிவப்பு இன்னொரு சிவப்பை மோப்பம் பிடித்து இதுவும் நம்ம மாதிரி தான் "நான் வாழவேண்டுமென்றால் உயரவேண்டுமென்றால் இன்னொருவனை அழித்தாலும் பரவாயில்லை என்ற ஒரே மனநிலை கொண்ட இவர்கள் இணைவது சகஜம் தானே"
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25-அக்-202016:31:57 IST Report Abuse
Sanny ரஷியா எல்லா நாடுகளுடனும் நடிப்பாக பழகும், காரணம் அவங்க, அவங்க நாட்டின் இராச்சியங்களை அறிய, அதுக்குப்பின் அவர்களை புறம் தள்ளி தனது நேச நாடான சீனா, வடகொரியா, வியட்நாம் போன்ற கம்யூனிச நாடுகளுடன் தனது நட்பை வைத்து கொள்ளும், அவர்களுக்கே பக்கபலமாக இருக்கும்,
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-அக்-202014:33:44 IST Report Abuse
தமிழவேல் இருந்தாலும் இந்தியாவிற்கு எதிரியாக கருதிவிட முடியாது. இந்தியா, நிறைய கொள்முதல் (ராணுவ தளவாடங்களும் இதில் சேர்ந்தது) செய்யும் நாடு. வாங்கும்திறன், தேவை இருக்கும் வரையில் அனைத்து நாடுகளும் நட்பு பாராட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X