ஸ்ரீநகர்: துர்காஷ்டமியை முன்னிட்டு, துர்க்கை கோவிலுக்குச் சென்ற, பரூக் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீரில் அமைதி நிலவுவதற்கும், மக்களின் நல்வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சித் தலைவருமான, பரூக் அப்துல்லா, துர்காஷ்டமியை முன்னிட்டு, நேற்று ஸ்ரீநகரில் உள்ள துர்கா நாக் கோவிலுக்குச் சென்று, சிறப்பு வழிபாடு நடத்தினார்.
வழிபாடு நடத்திய பின், அவர் கூறியதாவது:ஹிந்து மத சகோதர சகோதரிகளுக்கு, இது மிக முக்கிய நாள். இந்த புனித நாளில், அவர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவே இங்கு வந்தேன். ஜம்மு - காஷ்மீரில் அமைதி நிலவுவதற்கும், மக்களின் நல்வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்தேன். இடம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகள், மீண்டும் ஊருக்கு திரும்பவேண்டும் என்றும் வேண்டினேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

பாரம்பரிய, 'பதானி சூட்' உடையில், முக கவசம் அணிந்தபடி வந்த பரூக் அப்துல்லா, அங்கிருந்த மக்களுடன் கலந்துஉரையாடினார். துர்கா நாக் கோவில், 700 ஆண்டுகள் பழமைஆனது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE