பாகிஸ்தானின் உளவு விமானத்தை வீழ்த்தியது இந்திய ராணுவம்

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஜம்மு;ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, பாகிஸ்தானின் உளவு விமானத்தை, நம் வீரர்கள், சுட்டு வீழ்த்தினர்.இந்திய -சீன எல்லைப் பகுதியில், கடந்த சில மாதங்களாக, பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவம், நம் நாட்டின் ஜம்மு - காஷ்மீர் எல்லையில், தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளை, நம் நாட்டிற்குள் ஊடுருவ

ஜம்மு;ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, பாகிஸ்தானின் உளவு விமானத்தை, நம் வீரர்கள், சுட்டு வீழ்த்தினர்.



latest tamil news



இந்திய -சீன எல்லைப் பகுதியில், கடந்த சில மாதங்களாக, பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவம், நம் நாட்டின் ஜம்மு - காஷ்மீர் எல்லையில், தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளை, நம் நாட்டிற்குள் ஊடுருவ வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இவை அனைத்திற்கும், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், 'குவாட்காப்டர்' எனப்படும், உளவு பார்க்கும் சிறிய வகை, ஆள் இல்லா விமானத்தை, இந்திய எல்லைக்குள், பாகிஸ்தான் ராணுவம் நேற்று பறக்க விட்டது. ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் செக்டார் பகுதிக்குள் வந்த அந்த விமானத்தை, நம் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.


latest tamil news



சீன நிறுவனத்தின், 'டி.ஜே.ஐ., மேவிக் 2 புரோ' என்ற மாடலில், இந்த விமானம் உருவாக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வாயிலாக, பாகிஸ்தானின் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பின்பும், சீனாவின் கை உள்ளது என்பது தெளிவாக தெரிவதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
25-அக்-202016:48:27 IST Report Abuse
M.COM.N.K.K. இந்தியாவின் பதிலடி யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-அக்-202012:24:56 IST Report Abuse
Ramesh Sargam திறமையான இந்திய ராணுவவீரர்கள் இருக்கும்வரை, இந்தியாவுக்குள் ஒரு ஈ கூட நுழைய முடியாது. உஷார் எதிர் கட்சிக்காரர்கள் கேட்கலாம், அப்படி என்றால் சீனாவிலிருந்து எப்படி காரோண வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்தது என்று. அது கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ். அது இந்தியாவுக்குள் மட்டுமல்ல, பூரா உலகத்திற்கும் புகுந்து மக்களை கொன்று கொண்டிருக்கிறது. அதற்கும் ஒரு முடிவுகட்டும் இந்தியா சீக்கிரத்தில்.
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) இங்கு ஒரு குடும்ப அடிமை பாகிஸ்தானக்கு முட்டு கொடுத்து எழுதி இருக்கான் பிள்ளைகள் விளையாடும் பொம்மைகளை என்று? ட்ரான் முன்ன பின்ன பார்த்து இருக்கியா, அது இருக்கும் கேமரா தான் மேட்டர்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X