ஜம்மு;ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, பாகிஸ்தானின் உளவு விமானத்தை, நம் வீரர்கள், சுட்டு வீழ்த்தினர்.

இந்திய -சீன எல்லைப் பகுதியில், கடந்த சில மாதங்களாக, பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவம், நம் நாட்டின் ஜம்மு - காஷ்மீர் எல்லையில், தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளை, நம் நாட்டிற்குள் ஊடுருவ வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இவை அனைத்திற்கும், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், 'குவாட்காப்டர்' எனப்படும், உளவு பார்க்கும் சிறிய வகை, ஆள் இல்லா விமானத்தை, இந்திய எல்லைக்குள், பாகிஸ்தான் ராணுவம் நேற்று பறக்க விட்டது. ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் செக்டார் பகுதிக்குள் வந்த அந்த விமானத்தை, நம் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

சீன நிறுவனத்தின், 'டி.ஜே.ஐ., மேவிக் 2 புரோ' என்ற மாடலில், இந்த விமானம் உருவாக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வாயிலாக, பாகிஸ்தானின் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பின்பும், சீனாவின் கை உள்ளது என்பது தெளிவாக தெரிவதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE