புதுடில்லி: கடந்த, 2019 - 2020ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, இந்தாண்டு, டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரி வாரியம், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:கடந்த, 2019 - 2020ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, இந்தாண்டு, ஜூலை, 31க்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு அமலால், இந்த அவகாசம், நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம், இந்தாண்டு, டிச., 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

அதேபோல், 2019 - 2020ம் நிதியாண்டுக்கான தணிக்கை செய்யப்பட வேண்டிய வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2021 ஜன., 31 வரை நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, 2018 - 2019ம் நிதியாண்டுக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம், டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE