பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 90 சதவீதத்தை நெருங்கும் கொரோனா மீட்பு விகிதம்

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவீதத்தை நெருங்குகிறது. கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரை விட, தொற்றில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், 12.69 லட்சம் பேரிடம் கொரோனா கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.இதன்

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவீதத்தை நெருங்குகிறது. கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரை விட, தொற்றில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



latest tamil news


கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், 12.69 லட்சம் பேரிடம் கொரோனா கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதன் முடிவில், 53 ஆயிரத்து, 370 பேரிடம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 78 லட்சத்து, 14 ஆயிரத்து, 682 ஆக உயர்ந்துள்ளது.இவர்களில், ஆறு லட்சத்து, 80 ஆயிரத்து, 680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் விகிதம் ஒட்டுமொத்த பாதிப்பில், 8.71 சதவீதமாக இருக்கிறது.கடந்த சில நாட்களாக, புதிய தொற்று எண்ணிக்கையுடன் ஒப்பிடும் நிலையில், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


latest tamil news


இதன்படி, நேற்று ஒரே நாளில், 67 ஆயிரத்து, 549 பேர், பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.இவர்களுடன், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை, 70 லட்சத்து, 16 ஆயிரத்து, 046 ஆக அதிகரித்துள்ளது; மீட்பு விகிதம், 89.78 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த, 24 மணி நேரத்தில், 650 பேர், கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மஹாராஷ்டிராவில், 184; மேற்கு வங்கத்தில், 60; சத்தீஸ்கரில், 58; கர்நாடகாவில், 51; உ.பி.,யில், 40; தமிழகத்தில், 33 இறப்புகள் பதிவாகி உள்ளன. இவர்களுடன், இதுவரை பலியானோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 17 ஆயிரத்து, 956 ஆக உயர்ந்துள்ளது.இறப்பு விகிதம், 1.51 சதவீதமாக இருக்கிறது.மஹாராஷ்டிராவில், 43 ஆயிரத்து, 015 பேரும், தமிழகத்தில், 10 ஆயிரத்து, 858 பேரும், கர்நாடகாவில், 10 ஆயிரத்து, 821 பேரும் உயிரிழந்துஉள்ளனர்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
25-அக்-202011:53:35 IST Report Abuse
Balaji பேரிடரை இதைவிட நல்ல முறையில் கையாண்டிருக்க முடியாது. சமயோசித அரசு... வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X