அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது?: 28ல் முதல்வர் ஆலோசனை!

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, வரும், 28ம் தேதி, முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில், மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு பிறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதுதொடர்பாக, மருத்துவக் குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன், மாதம்தோறும், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, வரும், 28ம் தேதி, முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்துகிறார்.



latest tamil news


தமிழகத்தில், மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு பிறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதுதொடர்பாக, மருத்துவக் குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன், மாதம்தோறும், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன்படி, நடப்பு மாதத்திற்கான ஆலோசனைக் கூட்டம், 28ம் தேதி நடக்கிறது. இதில், மருத்துவ நிபுணர் குழுவினர், பல்வேறு பரிந்துரைகளை வழங்க உள்ளனர்.ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்தும், மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.


latest tamil news


இந்த ஆய்வுக் கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.இக்கூட்டத்திற்கு பின், பண்டிகை காலம் கருதி, சினிமா தியேட்டர்கள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-அக்-202018:15:07 IST Report Abuse
Natarajan Ramanathan சினிமா தியேட்டர்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்காவது திறக்க வேண்டாம்....
Rate this:
Cancel
குருமாவளவன் சோறு தான் திங்கிறானா ஸ்கூல் எப்ப ஐயா திறப்பீங்க
Rate this:
25-அக்-202011:51:16 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )இந்துமத விரோதி சுடலை கான் திறக்க வேணாம்னு போராட்டம் பண்ணுவானேப்பா...
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
25-அக்-202008:21:51 IST Report Abuse
siriyaar தமிழ்நாடு உருப்படவேண்டும் வேண்டுமென்றால் மது கடைகளையும் , சினிமாவையும் சன் டீவியையும் தடை செய்தால் போதும். மற்றது மக்கள் செய்வார்கள். மக்கள் செயல்பாட்டை முடக்கி வைத்துள்ளது இவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X