பொது செய்தி

இந்தியா

எல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை வேண்டிக் கிடக்கு...

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
கொடுக்கிற குணம், வள்ளல் வாரிசுகளுக்கே வரும். 'கொரோனா தடுப்பூசி இலவசம்' என்ற, முதல்வர் இ.பி.எஸ்.,சின் மக்கள் போற்றும் அறிவிப்பு கண்டு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பதற்றப்பட வேண்டாம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.'எல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை வேண்டிக் கிடக்கு...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி, சீமான், கே.சி.பழனிசாமி, சித்தராமையா

கொடுக்கிற குணம், வள்ளல் வாரிசுகளுக்கே வரும். 'கொரோனா தடுப்பூசி இலவசம்' என்ற, முதல்வர் இ.பி.எஸ்.,சின் மக்கள் போற்றும் அறிவிப்பு கண்டு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பதற்றப்பட வேண்டாம்
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.


'எல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை வேண்டிக் கிடக்கு...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமையும், கேந்திரிய வித்யாலயா பள்ளி, மிகச் சிறந்த, தரமான பள்ளிக் கல்வியைத் தரும் விதமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த புதிய பள்ளி மூலம் பயனடையப் போகும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
- அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்.


'கண்டிப்பாக பாருங்க... எல்லா கட்சி பிரமுகர்களும், இந்த பள்ளியில் இடம்கேட்டு வருவர்; அதில், பாரபட்சமே பார்க்க மாட்டார்கள், நம் கட்சியினர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் அறிக்கை.அரசுப் பள்ளிகளிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் மருத்துவர்கள் உருவான நிலை மாறி-, 'நீட்' வந்த பிறகு, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவோரின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தைக் கூடத் தாண்டவில்லை. நம் மாணவர்களின், எம்.பி.பி.எஸ்., கனவு பாழாய் போகிறது
- உதயநிதி ஸ்டாலின்.


'உங்கள் கட்சியினர் நடத்தி வரும் மருத்துவக் கல்லுாரிகளிலும், பெட்டி நிரம்பவில்லை என்பதையும் சொல்லி விடுங்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.ஹிந்துகளை விடுங்க, திருமாவளவன் சார்... உங்கள் சமுதாய பெண்கள், அதே சமுதாய ஆண்களால் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதையும் எண்ணிப் பாருங்கள்!
- ஷியாம் கிருஷ்ணசாமி


'முதலில், உங்கள் முதுகில் உள்ள அழுக்கை பாருங்கள் என்கிறீர்கள்... சபாஷ்' என, கூறத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை.மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு, கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். தமிழக அமைச்சரவை முடிவை, நியமன பதவி மூலம் அதிகாரம் பெற்றிருக்கும் கவர்னர் தடுத்து முடக்குவது, மக்களாட்சி தத்துவத்தின் மகத்துவத்தையே தகர்க்கும் கொடுஞ்செயல்
- சீமான்.


'அது தான், அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிறப்பு. கவர்னர் அனுமதி, புதிய சட்டங்களுக்கு தேவை என்று இருப்பதால் தான், இந்தியா இன்னும் இருக்கிறது; இல்லையேல், உங்களைப் போன்றவர்களால் என்றோ உடைந்திருக்கும்...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.அ.தி.மு.க.,வில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இடையேயான பிரச்னை ஓயவில்லை. வரும், சட்டசபை தேர்தலில், மீண்டும் ஆட்சியை பிடிக்காவிட்டால், இவர்கள் இருவரும் இல்லாத, புதிய தலைமையை கட்சியினர் உருவாக்கி விடுவர்
- முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி.


latest tamil news

'தேர்தலுக்கு முன், நீங்கள், தி.மு.க., அல்லது காங்., பக்கம் போய் விடுவீர்கள் என்கின்றனரே; அது, உண்மை தானா...' என, கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி பேட்டி.பிரதமராக இருப்பவர், கொரோனா வைரசை ஒழிக்க, அறிவியல் பூர்வமான காரணங்களை கூறுவதை விட்டு, ஜோதிடர்களைப் போல பேசிக் கொண்டிருந்தால், மக்கள் முட்டாள்கள் ஆகாமல் வேறு என்ன ஆவர்?
- முன்னாள் முதல்வர் சித்தராமையா


'ராகுல் பிரதமராக இருந்து இருந்தால், கொரோனாவை ஒழித்து கட்டியிருப்பார்என்கிறீர்களா...' என, காட்டமாக கேட்கத் தோன்றும் வகையில், கர்நாடகா காங்., முன்னாள் முதல்வர் சித்தராமையா பேட்டி.கொங்கு பகுதியைச் சேர்ந்த, தங்கமணி, வேலுமணி போன்றோர் சிறப்பாகச் செயலாற்றுவதால் தான், பல முக்கிய பொறுப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படவில்லை
- அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் புகழேந்தி.


'எப்படி, 'சிறப்பாக' செயலாற்றுகின்றனர் என்பதை தெளிவாக சொன்னால், மக்களுக்கும் நன்கு புரியுமே...' என, கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேட்டி.ஈ.வெ.ரா.,வின் கருத்துகள், கடவுள் மறுப்பாக மட்டும் இருந்தால், நாங்கள் கண்டுகொள்ளப் போவதில்லை. அவர், ஹிந்து கடவுள்களுக்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக பேசினார். அதனால் தான், அவரை, பா.ஜ.,வும், நானும் எதிர்க்கிறோம்
- பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.


'அது மட்டுமின்றி, ஹிந்து கடவுள்களை அவதுாறு செய்தார். அவர் விட்டுச் சென்றதை, தி.க.,வினர் தொடர்கின்றனர். அதனால் தான், எதிர்க்கிறோம் என்றும் சொல்லுங்களேன்...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி.சசிகலாவிடம், இ.பி.எஸ்., எப்படி தவழ்ந்து போய், முதல்வர் பதவியை பெற்றார் என்பது, அனைவரும் அறிந்த விஷயம். அவர், சிறையிலிருந்து வந்ததும், அ.தி.மு.க.,வில் சிலர் எதிர்ப்பர்; சிலர் ஆதரிப்பர். அது, அவர்களின் உட்கட்சி விவகாரம்
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்.


'உங்க கட்சி விவகாரம் தான், ஊரறிந்தது ஆயிற்றே; அதைப் பற்றியும், தி.மு.க.,விடம் நிதி பெற்றது குறித்தும், விளக்கி விடுங்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி.


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaravel - chennai,இந்தியா
26-அக்-202011:15:20 IST Report Abuse
kumaravel வரலாற்றை அதன் காலத்திற்கே சென்று பார்க்க வேண்டும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-அக்-202018:12:53 IST Report Abuse
Endrum Indian சுடலை மாயாண்டி இப்போ 7.5% அரசு பள்ளிகளில் படித்த ...............கொடுத்தாச்சு என்று வைத்துக்கொள்வோம். அப்புறம் என்ன கேட்பே நீ அரசு பள்ளிகளில் படித்த குள்ளமான மாணவர்களுக்கு கருப்பான மாணவர்களுக்கு குறைந்தது 2.5% கொடுக்கவேண்டும் என்று கேட்பாயா அடுத்ததாக. முதலில் இந்த ஒதுக்கீடை ஒழித்து தேர்வுகளில் நல்ல ராங்க் வாங்கியவர்களுக்கு வரிசை பிரகாரம் கொடுக்கப்படும் என்று உடனே அறிவிக்கவேண்டும். போதும் இந்த சனியன் பிடித்த இட ஒதுக்கீடு இதுக்கு அதுக்கு என்று
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
25-அக்-202014:26:35 IST Report Abuse
siriyaar இலவசம் ( கமிஷன் போக கடன்). நமக்கு இலவசம் கொடுக்கிறாங்க அரசியல் கட்சிங்க அப்படின்னா என்ன. இப்ப நம்ம வங்கியில் நேர கடன் வாங்கினா மாதம் மாதம் தவணை மற்றும் வட்டியை திருப்பி செலுத்துவோம். அது 5 ஆண்டு பத்து ஆண்டுக்கு இருக்கும் பின் எதுவும் கட்ட வேண்டியது இல்லை. இலவசம்னா அரசாங்கம் நம்ம பேரில் கடன் உலக வங்கியில் வாங்கிட்டு நம்ம வாங்கிற அனைத்து பொருட்களுக்கும் மற்றும் சம்பாதிகாகும் அனேகத்துக்கும் வரி என்று போட்டு அதை வாங்கி வட்டி மட்டும் கட்டுவது. இலவசம் வாங்கினாலும் வாங்காட்டாலும் அனைவருக்கும் வரி இருக்கும், ஒரு முறை வாங்கிய இலவசத்திற்கு சாகும் வரை வட்டி கட்ட வேண்டும் , மற்றும் நமக்கு பிறக்கும் குழந்தைகளும் சந்ததிகளும் கட்ட வேண்டும். இலவசமாகவாங்கிய பொருள் உடைந்து போனாலும் கட்டணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X