பொது செய்தி

தமிழ்நாடு

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020
Share
Advertisement
திங்கள் முதல் ஞாயிறு வரை (26.10.2020 - 1.11.2020) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் சந்திரன், குரு, செவ்வாய் சாதக நிலையில் உள்ளனர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.அசுவினி: ரகசியங்களை காப்பாற்றுவீர்கள். அரசு வழியில் ஆதரவு கிட்டும். சிலருக்கு அஜீரணக் கோளாறு தோன்றும். உங்களின் தனித்திறனால்
வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம்,  கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம், கும்பம், மீனம்

திங்கள் முதல் ஞாயிறு வரை (26.10.2020 - 1.11.2020) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


சந்திரன், குரு, செவ்வாய் சாதக நிலையில் உள்ளனர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.அசுவினி: ரகசியங்களை காப்பாற்றுவீர்கள். அரசு வழியில் ஆதரவு கிட்டும். சிலருக்கு அஜீரணக் கோளாறு தோன்றும். உங்களின் தனித்திறனால் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள்.பரணி: எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். பெற்றோரின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும்.கார்த்திகை 1: குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். தம்பதி இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை, தாமதம் ஏற்படலாம். பெண்கள் வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.


ரிஷபம்


latest tamil news


புதன், சுக்கிரன், சந்திரன் தாராள நன்மைகளை வழங்குவர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.கார்த்திகை 2,3,4: திடீர் செலவுகள் ஏற்படலாம். பெண்கள் அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லவும். அரசியல்வாதிகள் எந்த செயலிலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது.ரோகிணி: வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இளைஞர்கள், உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளியூரில் உள்ள பிள்ளைகளின் மூலம் நல்ல செய்தி வரும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தினரிடையே நெருக்கம் உண்டாகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் முடியும்.


மிதுனம்


சந்திரன், குரு, புதன், சுக்கிரன் தாராள நன்மைகளை வழங்குவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.மிருகசீரிடம் 3,4: செலவுகளை குறைக்க முயன்று வெற்றி பெறுவீர்கள். அனைத்து பணிகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி இருக்கும். கடந்த காலத் தவறுகளை நினைத்து வருத்தம் அடைவீர்கள்திருவாதிரை: பொறுப்புடன் பணியாற்றுவீர்கள். குடும்ப விவகாரங்களுக்காக அலைய வேண்டியிருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பீர்கள். உற்ற நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் வேலையாட்களால் நன்மை ஏற்படும். மேலதிகாரிகளை பகைத்துக் கொண்ட சக பணியாளரை சமாதானம் செய்து இணைப்பீர்கள். பொறுமை சற்று அதிகரிக்கும்.


கடகம்


சந்திரன், செவ்வாய் நன்மை அளிப்பர். குருவாயூரப்பன் வழிபாடு கஷ்டம் நீக்கும்.புனர்பூசம் 4: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர்களுடன் இருந்த வேறுபாடுகள் நீங்கும்.பூசம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினருக்கு உதவி செய்து பாராட்டு பெறுவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். ஆடம்பர பொருட்கள் சேரும்.ஆயில்யம்: உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதை ஒத்திப்போடுவீர்கள்.சந்திராஷ்டமம் : 26.10.2020 காலை 6:00 - 28.10.2020 அதிகாலை 5:26 மணி


சிம்மம்


சுக்கிரன், குரு, புதன் தாராள அனுகூலங்களை அளிப்பர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.மகம்: பொதுப்பணியில் உள்ளோர் மக்களுடன் சேர்ந்து பணியாற்றும் சூழல் உருவாகும். உங்களுக்கு வர வேண்டிய தொகைக்காக உறவினருடன் மனஸ்தாபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.பூரம்: தந்தையின் உடல்நலம் சீராக ஆரம்பிக்கும். நண்பர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை புரிந்து கொள்வீர்கள். உறவினரை அனுசரித்து செல்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.உத்திரம் 1: பிறருடன் வீண் விவாதம் செய்ய வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். மனதளவில் மிக உற்சாகமாக இருப்பீர்கள். பெண்களுக்கு சுறுசுறுப்பு அதிகமாகும்.சந்திராஷ்டமம் : 28.10.2020 அதிகாலை 5:27 - 30.10.2020 மாலை 4:43 மணி


கன்னி


குரு, புதன், சந்திரன் உதவிகரமாக உலவுகிறார்கள். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.உத்திரம் 2,3,4: பிரச்னைகள் தீரும். வரவு திருப்தி தரும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தொழில் தொடங்கும் திட்டம் முன்னேறும். பிள்ளைகளால் கூடுதல் வருமானம் உண்டு.அஸ்தம்: நன்மைகள் நடைபெறும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இப்போது வேண்டாம். உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உடல்நலம் சீராகும்.சித்திரை 1,2: வாகனம் வாங்கும் முயற்சியில் சிறு தடைகள் இருக்கலாம். பிறர் நலனில் அக்கறை செலுத்தியதற்கான பலனை பெறுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தந்தையால் அனுகூலம் உண்டு.சந்திராஷ்டமம் : 30.10.2020 மாலை 4:44 மணி - 1.11.2020 நாள் முழுவதும்


துலாம்


புதன், சந்திரன், செவ்வாய் உதவிகரமாக உள்ளனர். பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.சித்திரை 3,4: எதிரிகளின் பலம் கூடும். எதையும் நன்றாக சிந்தித்துச் செய்வது நல்லது. பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள். குடும்பத்தில் சுப விரயங்கள் அதிகரிக்கும்.சுவாதி: நினைத்ததெல்லாம் ஓரளவே நிறைவேறும். விரும்பியவர்களுக்காக ஒரு செயலைச் செய்து மகிழ்வீர்கள். இடமாற்றங்கள் உறுதியாகலாம். தொழிலில் தடைப்பட்ட விஷயங்களைத் தொடருவீர்கள்.விசாகம் 1,2,3: முன்னர் ஆரம்பித்த விஷயங்கள் தற்போது நல்ல வளர்ச்சி பெறும். மனக்குறை அகலும். வருமானம் வரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தை முடிவாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர்.


விருச்சிகம்


குரு, செவ்வாய், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும். விசாகம் 4: நன்மைகள் நடைபெறும் வாரம். பிறரது ஒத்துழைப்பு வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் வெற்றி தரும். சக பணியாளர்களுடனான கருத்து வேறுபாடுகள அகலும்.அனுஷம்: தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விட்டுப்போன திருமணப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் வந்து சேரலாம்.கேட்டை: பிரியமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அன்றாடப் பணிகள் நன்றாக முடியும். கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும். மன நிம்மதி மீளும்.


தனுசு


புதன், சுக்கிரன், ராகு, கேது நன்மைகளைத் தருவர். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.மூலம்: வரவை விட செலவு கூடும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொல்லை ஏற்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.பூராடம்: கவலைகள் தீரும். கடவுள் வழிபாட்டை மேற்கொள்வீர்கள். கடன் சுமை சற்றுக் குறையும். மைத்துனருடன் இருந்த மனக்கசப்பு தீரும். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்பட்டு குணமாகும்.உத்திராடம் 1: சந்தோஷம் அதிகரிக்கும். முயற்சி கைகூடும். கோபத்தால் பிரிந்தவர்கள் இணையும் வாய்ப்பு உண்டு. வாகன வேகத்தைக் குறைப்பது நல்லது. பிள்ளைகளின் வெளிநாட்டு முயற்சி வெல்லும்.


மகரம்


புதன், சுக்கிரன், சந்திரன் அனுகூலமான இடங்களில் உள்ளனர். நரசிம்மர் வழிபாடு பயம் போக்கும்.உத்திராடம் 2,3,4: வளர்ச்சி கூடும் நாள். பொதுநலன் கருதி புதிய திட்டம் தீட்டுவீர்கள். பெரியோரின் ஆதரவு உண்டு. தந்தை வழிச் சொத்துகளால் ஏற்பட்ட பிரச்னை அகலும்.திருவோணம்: எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் வாரம். தொலைபேசி வழித்தகவல் சந்தோஷம் அளிக்கும். உடன்பிறந்தோர் பகையை மறந்து செயல்படுவார்கள். நண்பர்கள் உதவுவார்கள்.அவிட்டம் 1,2: நட்பு வட்டத்தில் தற்காலிகப் பிரிவினை இருக்கும். தொழிலில் எடுத்த முயற்சி கைகூடும். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதங்கள் மறையும். முன்பு எடுத்த முடிவை மாற்றிக் கொள்வீர்கள்.


கும்பம்


குரு, புதன், சுக்கிரன், சந்திரன் சாதக அமைப்பில் உள்ளனர். சூரியன் வழிபாடு வளம் தரும்.அவிட்டம் 3,4: திட்டமிட்ட விஷயம் சற்று நிதானமாகவே நடைபெறும். பேச்சுத் திறமையால் ஒரு விஷயத்தை சாதிப்பீர்கள். விட்டுப் போன வேலை வாய்ப்பு மீண்டும் வந்து சேரலாம்.சதயம்: கலைஞர்களின் புகழ் கூடும். பிள்ளைகளுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டு. புண்ணியச் செயல்களில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிரிகள் மனம் மாறுவர்.பூரட்டாதி 1,2,3: வெளிநாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலம் தரும். நண்பர்களுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும்.


மீனம்


சந்திரன், புதன் நற்பலன்களை அள்ளி வழங்குவர். தன்வந்திரி வழிபாடு தொழிலில் உயர்வு தரும்.பூரட்டாதி 4: எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். அனுபவசாலிகளின் ஒத்துழைப்பால் பிரச்னைகளை திறம்பட எதிர்கொள்வீர்கள். பொது சேவைகளை முன்னின்று நடத்துவீர்கள்.உத்திரட்டாதி: காணாமல் போன விலையுயர்ந்த பொருள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உறவினர் மத்தியில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான சாதனைகள் செய்வீர்கள்.ரேவதி: புதிய மனிதர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சி கூடும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X