சலூனில் நூலகம்: தூத்துக்குடிக்காரருக்கு மோடி பாராட்டு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சலூனில் நூலகம்: தூத்துக்குடிக்காரருக்கு மோடி பாராட்டு

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (11)
Share
புதுடில்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தூத்துக்குடி மாவட்டத்தில் சலூன் கடை நடத்தி வரும் பொன்.மாரியப்பன் என்பவர், கடையில் ஒரு பகுதியில் நூலகம் அமைத்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி உறுதி. இந்த பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
MannKiBaat, Narendramodi, Modi, Tuticorn, Pon.mariappan, library, saloon, தூத்துக்குடி, சலூன்,  மன்கிபாத், நரேந்திரமோடி, பிரதமர்மோடி, PmModi,

புதுடில்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தூத்துக்குடி மாவட்டத்தில் சலூன் கடை நடத்தி வரும் பொன்.மாரியப்பன் என்பவர், கடையில் ஒரு பகுதியில் நூலகம் அமைத்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி உறுதி. இந்த பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பொருட்களை வாங்கும் போது உள்ளூரில் தயாரிக்கப்பட்டதை வாங்க முன்னுரிமை அளியுங்கள்.கொரோனா தொற்று பரவியுள்ள இந்த சூழ்நிலையில், நடைபெற உள்ள திருவிழா, பண்டிகைகளின் போது நாம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தனி மனித இடைவெளியுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள்.பண்டிகை காலங்களில் ராணுவ வீரர்கள் எல்லையில் இருந்தாலும், ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் இருக்கிறது. உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறது என நான் தெரிவிவிக்க விரும்புகிறேன்.

நமது ஆன்மிகம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவை உலகை கவர்ந்திருக்கின்றன. தமிழகத்தின் வழுக்குமரம், ஏறுதல் போன்ற வீர விளையாட்டை ஒத்திருக்கும் நமது மல்கம்ப் விளையாட்டு பல நாடுகளில் பிரபலமாகி வருகிறது.


உத்வேகம் அளிக்கும் முயற்சி


தூத்துக்குடியை சேர்ந்த பொன்.மாரியப்பன் என்பவர் சிறிய சலூன் நடத்தி வருகிறார்.சலூனில் ஒரு பகுதியை நூலகமாக மாற்றியுள்ளார். அதில் தான் கற்றதை மற்றவர்களுக்கு படிக்க வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளார்.தனது கடையில் காத்திருக்கும் வாடிக்கையாளர் ஒரு புத்தகத்தை படிக்கிறார் என்றால், அவருக்கு பொன்.மாரியப்பன் கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கிறார். இது ஒரு உத்வேகம், அளிக்கும் முயற்சி. இவ்வாறு குறிப்பிட்ட மோடி தொடர்ந்து மாரியப்பனிடம் தமிழில் உரையாடினார்.


latest tamil news




மாரியப்பனிடம் பிரதமர் மோடி தமிழில் பேசியதாவது;
வணக்கம் மாரியப்பன், நல்லா இருக்கீங்களா?
மாரியப்பன்: நலமாக உள்ளேன்.
மோடி: இந்த லைப்ரரி ஐடியா எப்படி வந்தது.
மாரியப்பன்: நான் 8 ம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். அதற்கு மேல் படிக்க முடியவில்லை. படித்தவர்களை பார்க்கும் போது ஏக்கம் இருந்தது. இதனால், நூலகம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதனால், இந்த முயற்சி எடுத்து இவ்வாறு செய்கிறேன்.
மோடி: உங்களுக்கு எந்த புத்தகம் பிடிக்கும் .
மாரியப்பன்: எனக்கு திருக்குறள் பிடிக்கும்.
மோடி:நல்வாழ்த்துகள்.
மாரியப்பன்: பிரதமரிடம் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆதி சங்கரர் நாட்டின் நான்கு திசைகளுக்கும் பயணித்து, மகத்துவம் வாய்ந்த நான்கு மடங்களை நிறுவி அவற்றை மேன்மையடைய செய்தார். தனது பக்தி மற்றும் வழிபாடு மூலம் நாட்டை ஒன்றுபடுத்தியவர்

வேளாண் சட்டங்களால் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயனடைகின்றனர். விவசாயிகளிடம் பல தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றனர்.மக்காச்சோள விவசாயிகளுக்கு தங்களுடைய விலையை தவிர போனஸ் தொகை கிடைக்கிறது. விவசாயிகள் தொழில்நுடம்பம் மூலம் புதிய வியாபார வாய்ப்புகளை உருவாக்கலாம்.

அக்.,31 அன்று, வால்மீகி ஜெயந்தியை நாம் கொண்டாட உள்ளோம். நான் மஹரிஷி வால்மீகியை வணங்குகிறேன். இதேநாளில் தான் நமது முன்னாள் பிரதமர் இந்திராவை இழந்தோம். அவருக்கு எனது அஞ்சலியை உருவாக்குகிறேன்.பண்டிகை காலங்களில் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். மாஸ்க் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஆறடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் நமது வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்த நேரத்தில், நமக்கும், சமூகத்திற்கும் துணையாக இருந்தவர்களை பண்டிகை நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்கள், வீட்டுக் காவலர்கள், வீட்டுப் பணியாளர்கள் ஆகியோர் கொரோனா காலத்தில் நமக்கு துணையாக எண்ணற்ற உதவிகளைச் செய்தார்கள். அவர்களோடு சேர்ந்த பண்டிகைகளை கொண்டாட வேண்டும்.

நாம் நம்முடைய துணிச்சல் மிக்க எல்லையில் காவல் காக்கும் வீரர்களை இந்தப் பண்டிகை காலத்தில் நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் வீடுகளில் விளக்கு ஏற்றி அவர்களை பெருமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X