பொது செய்தி

இந்தியா

புத்தக அறிமுகம்: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து
book, bookreview,  புத்தக அறிமுகம், மீனாட்சிசுந்தரேஸ்வரர், திருக்கோயில், தலவரலாறு

சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.


01. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறுவெளியீடு: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
மதுரை.
பக்கம்: 216 விலை: ரூ.50

திருக்கோவில் வெளியீடாக வந்துள்ள நுால். மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தல வரலாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. காப்பில் துவங்குகிறது. கால வரிசைப்படி வரலாற்று தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
பாண்டியர் ஆட்சியில் துவங்கி நாயக்க மன்னர்கள் ஆட்சி வரை உள்ளது.கோவிலில் வழிபடும் முறை, தினசரி பூஜை விபரங்கள் விரிவாக தரப்பட்டுள்ளது. திருவிழாக்கள், உப கோவில் விபரங்கள், கோவில் அமைப்பு முறை, நடந்துள்ள திருப்பணிகள் போன்ற விபரங்களும் கூறப்பட்டுள்ளன.
தலக்குறிப்பில், இலக்கியம், கல்வெட்டு, ஓவிய, சிற்பங்கள் பற்றிய தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. கோவில் சார்ந்த ஏராளமான வண்ணப்படங்கள் இடம்பெற்று உள்ளன. மிகத் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் பற்றிய முழு விபரங்களை உள்ளடக்கியது. பக்தர்களுக்கு மிகவும் உதவும்.


02. தர்மேந்திரா மக்கள் கலைஞன்ஆசிரியர்: அப்சல்
வெளியீடு: இருவாட்சி பதிப்பகம்
பெரம்பூர், சென்னை - 11.
தொலைபேசி: 94446 40986
பக்கம்: 208 விலை: 200


latest tamil news
ஹிந்தி நடிகர் தர்மேந்திரா பற்றிய நுால். அவருடன் பணியாற்றிய, நடிகர்கள், நடிகையர், இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள், பாடகர்கள் குறித்த அரிய தகவல்கள் அடங்கியுள்ளன.
தர்மேந்திரா நடித்த, 283 திரைப்படங்களின் பட்டியல், கவுரவ வேடத்தில் நடித்த படங்கள்,ஊதியம் வாங்காமல் நடித்தவை, விருது பெற்றவை, சிறந்த, 13 படங்கள், அதன் புகைப்படங்கள், இந்நுாலில் இடம் பெற்றுள்ளன.
மேலும், எந்தெந்த தமிழ் படங்கள், ஹிந்தியில் 'ரிமேக்' செய்து, அதில் தர்மேந்திரா நடித்துள்ளார், இவருடன் நடித்த தமிழ் நடிகர்கள், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் விவரிக்கிறது. சினிமாவை ரசிப்பவர்களுக்கு இந்நுால் பொக்கிஷம்.
- டி.எஸ்.ராயன்


03. திருவாசகப் பயணம் முதல் சுற்றுஆசிரியர்: முனைவர் அ.நாகலிங்கம்
வெளியீடு: ஐயா பச்சையப்பர் இல்லம்
3, பேராசிரியர் தெரு, சோழன் நகர்,
பட்டாபிராம், சென்னை - 72.
தொலைபேசி: 044 - 2685 2884
பக்கம்: 96 விலை: ரூ.80


latest tamil news


Advertisementசிவ புராணம், கீர்த்தித்திரு அகவல் பிரிவுகளுக்கு பாடலைப் பிரித்து, அரும்சொல் விளக்கம் தந்து விளக்கவுரையை குறிப்புகளுடன் எழுதி உள்ளார். நால்வர் நான்மணி மாலையிலிருந்து மாணிக்கவாசகர் பற்றிய 10 பாடல்களை வெளியிட்டதோடு, அவர் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மாணிக்கவாசகர் குறிப்பிடும் பிறப்புகளை இரு வகைகளாக விளக்கியிருப்பது அருமை. ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை வகைப்படுத்தி தரப்பட்டுள்ளன.திருவாசக உரைகளை ஆய்ந்து அரிய செம்பொருள் விளக்கம் தந்துள்ளார். கீர்த்தித் திரு அகவல் பகுதியில் சிவபெருமானின் பெருமை விளக்கப்படுகிறது. திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்னும் வாக்கை உணரலாம்.
- பேராசிரியர் இரா.நாராயணன்


04. பாம்பன் சுவாமிகள்ஆசிரியர்: பா.சு.ரமணன்
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்,
21, 'லட்சுமி' சத்யசாய் நகர்,
மதுரை - 625 003.
டோல்ப்ரீ: 1800 425 7700
பக்கம்: 148 விலை: ரூ.160

ராமநாதபுரம் பாம்பனில் அப்பாபுவாக பிறந்தவர் பாம்பன் சுவாமிகளாக, குமரகுருதாச சுவாமிகளாக அறியப்பட்டார். முருகனை முழுமுதற்கடவுளாக கொண்டு தமிழகம் முழுக்க யாத்திரை சென்றவர். கற்றறிந்ததை அறிவால் பெற்றறிந்ததை சண்முக கவசமாக, குமாரஸ்தவமாக மக்களுக்கு அருளியவர்.
அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால் இது. வாழ்வின் பெரும்பகுதியை இறை அனுபவத்திற்காக, மக்களின் இறை வாழ்விற்காக செலவிட்டவர் பாம்பன் சுவாமிகள். இல்லறத்தில் இருந்து நிரந்தர துறவறம் செல்ல நினைத்தவர் முருகனே பழநிக்கு அழைத்தாரா என நண்பர் கேட்க, ஆம் என்று சொன்னதற்காக முருகப்பெருமானே கடிந்து கொண்டதால் இறுதி வரை பழநி செல்லவில்லை.
அதேநேரத்தில் காணக்கிடைக்காத ஒரு அதிசய இடத்தை, முருகனே அழைத்துச் சென்று காண்பிக்கும் வரம் பெற்ற அதிசய மகான் இவர். எழுத்தும், இறையுமாக வாழ்ந்த மகானின் வரலாற்றை படிப்பது, கந்தனை வணங்குவதற்கு சமம் என்பதை விளக்கியுள்ளார் ஆசிரியர் ரமணன்.
- எம்.எம்.ஜெ.,


05. புதிய ஆத்திசூடி கதைகள் 50ஆசிரியர்: முனைவர் வை.சங்கரலிங்கனார்
வெளியீடு: நண்பர்கள் பதிப்பகம்
அலைபேசி: 89253 35858
பக்கம்: 120 விலை: ரூ.150


latest tamil news
மகாகவி பாரதி எழுதிய புதிய ஆத்திசூடியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். 50 கதைகள் உள்ளன. புதிய ஆத்தி சூடி கவிதை வரிகளே தலைப்பாக்கப் பட்டுள்ளன.
கதைகளின் வரும் கருத்துப்படி வாழ்ந்தால், மனித குலம் மகான் குலமாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படித்தால் தன்னம்பிக்கை ஏற்படும்.


06. உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் - 75ஆசிரியர்: கமலா கந்தசாமி
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
10, நானா தெரு, சென்னை - 17.
அலைபேசி: 98402 26661
பக்கம்: 224 விலை: 230


latest tamil news
குழந்தைகளுக்கான வீர, தீர கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். தமிழ் பேராய விருது பெற்றது. படுக்கையறையில் குழந்தைகளை குதுாகலமூட்ட, சொல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாட்டி வடை சுட்ட கதையில் துவங்கி, அரசரும் பன்றியும் என்ற குறுங்கதையுடன் முடிகிறது. ஏற்கனவே கேட்ட கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் பேராய விருது பெற்று நுாலாக்கப்பட்டுள்ளது.


07. அம்மாவின் பிள்ளைகள்ஆசிரியர்: குரு அரவிந்தன்
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
தபால் பெட்டி: 1447,
சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2926
பக்கம்: 204 விலை: ரூ.125


latest tamil news
இலங்கையில் நடந்த இனப்படுகொலையால் புலம்பெயர்ந்தோர் துயரை மையமாக கொண்டும், 2018ல், தாய்லாந்து நாட்டில், 18 நாட்கள் இருண்ட குகையில் வெள்ளத்தில் போராடியவர்களை மீட்டு, உலகின் கவனத்தை ஈர்த்த உண்மைச் சம்பவத்தையும் மையமாகக் கொண்டு குறுநாவல்களாக படைக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான நடையில் உள்ளது. படித்து மகிழலாம்.
- பின்னலுாரான்

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
25-அக்-202012:45:28 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி 06. உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் - 75.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-அக்-202012:33:08 IST Report Abuse
Ramesh Sargam புத்தக விரும்பிகளுக்கு இது ஒரு அருமையான செய்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X