7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020
Share
சென்னை: தமிழக கடலோரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர்,
தமிழகம், மழை, சென்னைவானிலைமையம்,

சென்னை: தமிழக கடலோரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.


latest tamil news



வரும் 29ல் வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X