கவர்னரின் செயல் அதிகார எல்லை மீறல்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னரின் செயல் அதிகார எல்லை மீறல்: ஸ்டாலின்

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (35)
Share
சென்னை: மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் இழுத்தடிப்பது அதிகார எல்லை மீறல் எனவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தி.மு.க., தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வை ரத்து செய்ய போராட வேண்டிய
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் இழுத்தடிப்பது அதிகார எல்லை மீறல் எனவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க., தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வை ரத்து செய்ய போராட வேண்டிய அதிமுக அரசு, தனது இயலாமையையும், பொறுப்பற்றத்தனத்தையும் மறைப்பதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என முடிவு செய்தது. எந்த வகையிலேனும், எந்த அளவிலேனும் சிறு நன்மையாவது கிடைக்கட்டும் என்ற அடிப்படையில் தி.மு.க., அதனை வரவேற்றது. ஆனால், அதையும் அ.தி.மு.க., அரசு முறையாக நிறைவேற்றவில்லை.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, மேஜையில் தூசு படிந்து கிடக்கிறது. மக்கள் வழங்கிய அதிகரத்தை மத்திய அரசிடமும், அதன் பிரதிநிதியான கவர்னரிடமும் அடமானம் வைத்த அ.தி.மு.க., அரசு இந்த 7.5 இட ஒதுக்கீடு விவகாரத்தில் பல உண்மைகளை மறைத்து, மாணவர்களை ஏமாற்றி கொண்டுள்ளது.


latest tamil news



உள் ஒதுக்கீடு மசோதா குறித்து வாரங்களில் முடிவு எடுப்பதாக கவர்னர் தெரிவித்திருந்தாலும், ஏறத்தாழ 5 மாதங்களாகவே முடிவெடுக்கப்படாமல் இருக்கிறது என்பதுதான் அ.தி.மு.க., அரசால் மறைக்கப்பட்ட உண்மை. செப்.,15ல் தமிழக சட்டசபையில் உள ஒதுக்கீடு சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. கவர்னருக்கு சட்ட மசோதா அனுப்பப்பட்டு 5 வாரங்கள் கடந்துவிட்டன. இன்னும் 4 வார அவகாசம் வேண்டும் என கவர்னர் சொல்கிறார்.

கவர்னரின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதிகார எல்லை மீறலானது அதிகாரத்தில் உள்ள முதல்வரும், அமைச்சர்களும் கவர்னரிடம் தங்கள் உரிமைகளை நிலைநாடட முடியாத நிலையில், முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவரான என் மீது பாய்கிறார். துணிவிருந்தால், கவர்னரிடம் உரிமைக்குரலை எழுப்பட்டும். கவர்னருடனான சந்திப்பில் என்ன நடந்தது என்பதை மறைக்காமல் உரைக்கட்டும். உண்மையான அக்கறையும், உறுதியான நிலைப்பாடும் கொண்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்தட்டும். அதுவரை தி.மு.க., போராட்டம் ஓயாது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X