பொது செய்தி

இந்தியா

அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் கொரோனா தடுப்பு மருந்து: பாரத் பயோடெக் அறிவிப்பு

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: 2021ம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனை அளவில் ஈடுபட்டு வருகின்றன. அதில்,
CoronaVaccine, Covaxin, BharatBiotech, June, கொரோனா, தடுப்பு மருந்து, கோவாக்சின், பாரத் பயோடெக், ஜூன்

புதுடில்லி: 2021ம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனை அளவில் ஈடுபட்டு வருகின்றன. அதில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) சேர்ந்து 'கோவாக்சின்' என்ற தடுப்பூசி, 2-வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. 3வது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு (டிசிஜிஐ) பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பம் செய்திருந்தது. இதற்கு டிசிஜிஐ-யும் ஒப்புதல் அளித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில் இந்த தடுப்பு மருந்து 2021ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் செயல் இயக்குநர் சாய் பிரசாத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தற்போது கோவாக்சின் தடுப்பு மருந்தின் மீதான 3ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. தற்போது 25 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டு சுமார் 14 மாநிலங்களில் பரிசோதனையை நடத்தவுள்ளோம். எதிர்பார்த்தபடி ஒப்புதல்கள் கிடைத்தால் 2021-ம் ஆண்டு 2ம் காலாண்டில் பரிசோதனை முடிவுகள் தெரிய வரும். ஜூன் மாதம் கோவாக்சின் தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-அக்-202010:43:18 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan குட் நியூஸ் for இந்தியன்ஸ் ...
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
25-அக்-202014:21:21 IST Report Abuse
Karthik முன்னறிவிப்பு தேவையில்லை. அது ஒரு விளம்பரமும் கூட. வெற்றியோடு முடித்த பிறகு அறிவித்தால் போதுமானது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-அக்-202013:59:28 IST Report Abuse
Ramesh Sargam வொவொரு நாள் வொவொரு அறிவிப்பு. தடுப்பு மருந்து நம் கையில் கிடைக்கும்வரை எதுவும் நம்பமுடியாது. இவ்வளவு மாதங்கள் காத்திருந்தோம். மேலும் சில மாதங்கள் காத்திருப்போம். சீக்கிரம் கிடைக்க வேண்டிக்கொள்வோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X