சாம்சங் குழும தலைவர் லீ குன் ஹீ காலமானார்

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சியோல்: 80களில் சாதாரண நிறுவனமாக இருந்த சாம்சங்கை தனது உத்திகளால் உலக நிறுவனமாக்கிய அதன் தலைவர் லீ குன் ஹீ, தனது 78-வது வயதில் காலமானார்.1938-ல் லீ பயுங் சல் என்பவர் சாம்சங் நிறுவனத்தை தொடங்கினார். அவரது மூன்றாவது மகன் தான் லீ குன் ஹீ. 1942-ல் பிறந்த இவர் 1968-ல் குடும்ப நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். அவர் தந்தை மறைவை தொடர்ந்து 1987-ல் சாம்சங் நிறுவன தலைவரானார். அந்த
Samsung, LeeKunHee, Dies, சாம்சங், தலைவர், லீகுன்ஹீ, காலமானார்

சியோல்: 80களில் சாதாரண நிறுவனமாக இருந்த சாம்சங்கை தனது உத்திகளால் உலக நிறுவனமாக்கிய அதன் தலைவர் லீ குன் ஹீ, தனது 78-வது வயதில் காலமானார்.

1938-ல் லீ பயுங் சல் என்பவர் சாம்சங் நிறுவனத்தை தொடங்கினார். அவரது மூன்றாவது மகன் தான் லீ குன் ஹீ. 1942-ல் பிறந்த இவர் 1968-ல் குடும்ப நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். அவர் தந்தை மறைவை தொடர்ந்து 1987-ல் சாம்சங் நிறுவன தலைவரானார். அந்த சமயத்தில் சாம்சங் விலை மற்றும் தரம் மலிவான பொருட்களை உற்பத்தி செய்தது. லீ நிர்வாகத்தின் கீழ் வந்ததும் பல அதிரடி மாற்றங்களை செய்து உலக நிறுவனமாக மாற்றினார். இவரது காலத்தில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமானது.


latest tamil news


மாற்றங்கள் பற்றி தனது ஊழியர்களிடம் ஒருமுறை பேசும் போது, நகைச்சுவையாக “மனைவி, குழந்தைகளை தவிர எல்லாவற்றையும் மாற்றுவோம்” என கூறினார். தென் கொரியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான லீயின் சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி ஆகும். அவரது மறைவு குறித்து சாம்சங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல்நல குறைவால் ஞாயிறன்று லீ காலமானார். சாம்சங்கில் உள்ள நாம் அனைவரும் அவரது நினைவைப் போற்றுவோம். அவருடனான பயணத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.” என கூறியுள்ளது.


latest tamil news


பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும், சில சறுக்கல்களையும் லீ குன் ஹீ சந்தித்துள்ளார். முன்னாள் அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இருமுறை குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். வரி ஏய்ப்பு மற்றும் மோசடி குற்றச்சாட்டும் இவர் மீது வைக்கப்பட்டது. இதனால் 2008-ல் சாம்சங் தலைவர் பதவியில் இருந்து விலகினார். சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் அதிபர் பொது மன்னிப்பு வழங்கினார். 2010-ல் மீண்டும் சாம்சங் தலைவரானவர், 2014-ல் மாரடைப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். லீயின் மகன் லீ ஜெய்-யோங்கும் லஞ்ச வழக்கில் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
alamu - bharain,பஹ்ரைன்
25-அக்-202023:26:42 IST Report Abuse
alamu சோனி டிவி VS samsung tv war is always there last 25 yrs. Sony never compromised on price. Samsung also followed the same. I don't know what happened to our indian brands dyanora, bpl, solidaire, crown tv, konark tv, keltron,uptron, weston, binatone etc., when samsung first came to india in 90's. Out of all only onida is surviving. Rest all packed up.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
25-அக்-202021:14:35 IST Report Abuse
Tamilan இந்தியாவில் உள்ள ஒரு சில தொழில் அதிபர்கள்தான் இனியும் சிறை வாசம் அனுபவிக்காமல் இருக்கிறார்கள் . லஞ்சத்தில் ஊறித்திளைத்துள்ளதுடன் நாட்டையே லஞ்சக்காடாக , காட்டுமிராண்டிகள் நாடாக மாற்றியுள்ளார்கள் .
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-அக்-202020:17:19 IST Report Abuse
Ramesh Sargam லீயின் மகன் லீ ஜெய்-யோங்கும் லஞ்ச வழக்கில் சிறைவாசம் அனுபவித்த இவர் இனிமேலாவது திருந்தி நிறுவனத்தை நேர்மையான பாதையில் வழி நடத்திசெல்வாரா? வழி நடத்தி செல்லவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X