தனிமைப்படுத்தப்பட்டோம் இன்று உலகுடன் இணைகிறோம்: இஸ்ரேல் பிரதமர்

Added : அக் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஜெருசலேம்: யு.ஏ.இ., மற்றும் பக்ரைனுடனான நல்லுறவு ஒப்பந்தங்களை தொடர்ந்து, சூடானுடன் முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முழு உலகத்துடனும் இணைந்துள்ளதாக கூறினார்.இஸ்ரேல் நாடு உருவானதிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுடன் அதற்கு அரசாங்க ரீதியிலான உறவு இல்லாமல் இருந்தது. அங்கு ஈரானின் செல்வாக்கை குறைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து
Israel, PrimeMinister, Peace, Deals, MiddleEast, இஸ்ரேல், பிரதமர்

ஜெருசலேம்: யு.ஏ.இ., மற்றும் பக்ரைனுடனான நல்லுறவு ஒப்பந்தங்களை தொடர்ந்து, சூடானுடன் முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முழு உலகத்துடனும் இணைந்துள்ளதாக கூறினார்.

இஸ்ரேல் நாடு உருவானதிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுடன் அதற்கு அரசாங்க ரீதியிலான உறவு இல்லாமல் இருந்தது. அங்கு ஈரானின் செல்வாக்கை குறைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பக்ரைனுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இனி மத்திய கிழக்கு நாடுகளின் வான் பரப்பு வழியாக இஸ்ரேல் விமானங்கள் பறக்கலாம். இதனால் இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கு வரும் விமானங்களின் பயண நேரம், செலவு குறையும். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் முயற்சியின் மூலம் சூடானுடன் அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றியுள்ளது.


latest tamil news


இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: முன்னர் இஸ்ரேல் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது. இப்போது முழு உலகத்துடனும் இணைகிறது. இன்னும் பல நாடுகளுடன் நல்லுறவு ஒப்பந்தம் தொடரும். சவூதி அரேபியா, பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக விமானப் பயணம் நிறைய பணத்தையும், நேரத்தையும் மிச்சமாக்கும். சூடானுடனான ஒப்பந்தம் இஸ்ரேலியர்கள் அட்லான்டிக்கை கடக்க உதவும். நாம் மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றுகிறோம். என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
25-அக்-202019:51:58 IST Report Abuse
Rpalnivelu நம்பக் கூடாதவனை நம்பிக் கெடுவதும் தவறு நம்பக் கூடியவனை நம்பாமல் கெடுவதும் தவறு கவியரசு கண்ணதாசன்
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
25-அக்-202017:08:03 IST Report Abuse
Somiah M இஸ்ரேலின் செயல் பாராட்டுக்குரியது .
Rate this:
Cancel
Ayyappan Sargunam - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-அக்-202016:18:59 IST Report Abuse
Ayyappan Sargunam சலூட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X