ராமர் கோவிலை விட சீதா தேவிக்கு பெரிய கோவில்: சிராக் பஸ்வான் விருப்பம்

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
பாட்னா: லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) கட்சித் தலைவர் சிராக் பஸ்வான், ராமர் கோவிலை விட பெரிய கோவில், சீதா தேவிக்கு கட்டப்பட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.பீஹாரில் வரும் 28ம் முதல் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறிய லோக் ஜனசக்தி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. லோக்
ChiragPaswan, Sitamarhi, GoddessSita, Temple, BiggerThan, RamMandir,  சிராக் பஸ்வான், சீதா, கோவில், ராமர் கோவில்

பாட்னா: லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) கட்சித் தலைவர் சிராக் பஸ்வான், ராமர் கோவிலை விட பெரிய கோவில், சீதா தேவிக்கு கட்டப்பட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

பீஹாரில் வரும் 28ம் முதல் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறிய லோக் ஜனசக்தி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:


latest tamil news


அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை விட பெரிய கோவில் சீதாமார்ஹியில் சீதா தேவிக்கு கட்டப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சீதா தேவி இல்லாமல் ராமர் முழுமையடையாதவர் ஆவார். அதே போல் தான் ராமர் இல்லாமல் சீதாவும் முழுமையடையமாட்டார். எனவே, ராமர் கோவிலையும் சீதாமார்ஹியையும் இணைக்கும் ஒரு நடைபாதை கட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


நிதிஷ்குமாருக்கு சிறை


பக்சர் மாவட்டத்தில் தும்ரோன் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அவரது அமைச்சர்கள் சிறை கம்பிகளுக்கு பின்னால் நிற்பார்கள். மாநிலத்தில் மதுபானத்திற்கு தடை விதித்தது தோல்வியடைந்துவிட்டது. சட்டவிரோத மதுபானம் விற்கப்படுகிறது. இதற்காக, நிதிஷ்குமார் ஆதாயம் பெறுகிறார். பீஹாருக்கு முதலிடம், பீஹார் மாநிலத்தவர்களுக்கு முதலிடம் என்பதை அமல்படுத்த லோக்ஜனசக்தி கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள். அல்லது பாஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள். அடுத்து வரும் அரசு, நிதிஷ்குமார் இல்லாத அரசாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-அக்-202012:32:58 IST Report Abuse
Malick Raja லோக் ஜனசக்தி கட்சியின் கடையை மோடிஜி மூடி விட்டார் ..தேர்தலுக்கு பின் முத்திரை இட்டுவிடுவார் ..
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
26-அக்-202007:00:22 IST Report Abuse
a natanasabapathy ஒருத்தன் மூஞ்சியிலும் மாஸ்க் காணவில்லை இவனெல்லாம் நாட்டை திருத்த போகிறானாம்
Rate this:
Cancel
Murphys Law -  ( Posted via: Dinamalar Android App )
26-அக்-202006:22:41 IST Report Abuse
Murphys Law Raamaruku help pannina aniluku oru kovil kattavendum.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X