பொது செய்தி

இந்தியா

வீடு திரும்பினார் கபில் தேவ்

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், சிகிச்சைக்கு பின்னர், நலமுடன் வீடு திரும்பினார்.இந்திய அணிக்கு 1983 ல் முதல் உலக கோப்பை பெற்று தந்தவர் முன்னாள் கேப்டன் கபில்தேவ்(62). இதற்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் வேகமாக ளரத்துவங்கியது. சிறந்த ஆல் ரவுண்டரான இவர், 131 டெஸ்ட், 225 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றார்.
Kapildev, discharged, கபில்தேவ், கபில் தேவ், மருத்துவமனை

புதுடில்லி: மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், சிகிச்சைக்கு பின்னர், நலமுடன் வீடு திரும்பினார்.

இந்திய அணிக்கு 1983 ல் முதல் உலக கோப்பை பெற்று தந்தவர் முன்னாள் கேப்டன் கபில்தேவ்(62). இதற்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் வேகமாக ளரத்துவங்கியது. சிறந்த ஆல் ரவுண்டரான இவர், 131 டெஸ்ட், 225 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றார். 1994 ல் ஓய்வு பெற்றார். அவ்வப்போது கோல்ப் விளையாடினார்.


latest tamil news


இந்நிலையில், கடந்த 22ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டில்லியில் உள்ள ‛போர்டிஸ் எஸ்கார்ட்ஸ்' இருதயமையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை சரி செய்ய ‛ஆன்ஜியோபிளாஸ்டி' சிகிச்சை செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிரிவில் நலமாக இருந்தார். இதனையடுத்து அவர் இன்று டிஸ்சாரஜ் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கபில் தேவ் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார். விரைவில் வழக்கமான பணிகளை தொடர்வார். வழக்கமான ஆலோசனைகளை டாக்டர் அதுல் மாத்தூரிடம் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani - Chennai,இந்தியா
26-அக்-202011:52:35 IST Report Abuse
Mani விரைவில் எழுந்து வர பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-அக்-202021:58:08 IST Report Abuse
Ramesh Sargam மிகவும் சந்தோஷம். நன்றி கடவுளுக்கு.
Rate this:
Cancel
25-அக்-202021:38:11 IST Report Abuse
Ganesan Madurai இது கபில்தேவ் என நம்பமுடியவில்லை. ஹரியானாவின் சிங்கமாக களத்தில் கர்ஜித்தவருக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது மிகவும் கவலையாக உள்ளது. இவர் மிகவும் விரைவில் குணமடைய சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X