அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா உறுதி

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதியானதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, கடந்த 13ம் தேதி முதல்வரின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். விழுப்புரம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது மூச்சு திணறலால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து
அமைச்சர், துரைக்கண்ணு, கொரோனா

சென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதியானதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, கடந்த 13ம் தேதி முதல்வரின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். விழுப்புரம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது மூச்சு திணறலால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து விழுப்புரத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், சென்னையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துரைகண்ணுவுக்கு நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்புள்ளது, சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ஐசியூவில் சிகிச்சை பெறும் துரைக்கண்ணுவின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
26-அக்-202008:37:36 IST Report Abuse
samkey தமிழக அமைச்சர்களிலேயே மிக சிறந்த பண்பாளர். எளிமையானவர் அதீத இறை நம்பிக்கை உடையவர். யாரும் எளிதாக அணுகி தங்கள் குறைகளை சொல்லலாம். உடனே அந்த இடத்திலேயே நடவடிக்கை எடுப்பார். அவரை போலவே அவர் குடும்பத்தாரும் எளிமையாக அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள் கொரோன எனும் கொடிய அரக்கன் நல்லவர்களையே சோதிக்கிறான். அமைச்சர் மீண்டும் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel
Raghunathan Swaminathan - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
25-அக்-202020:46:28 IST Report Abuse
Raghunathan Swaminathan .குணமாகி மீண்டு வருக, அமைச்சரே.
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
25-அக்-202019:26:07 IST Report Abuse
Raj வெல்க விரைவில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X