புதுடில்லி:தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில்உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ துவங்கியது .இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதி முதல் கொரோனா வீரியம் காட்ட துவங்கியது. இதனையடுத்து மத்திய அரசு பல்வேறு கட்டங்களாக தடை உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு கொரோனாபாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்திலும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தவரும் தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ். இவர் தன்னுடை டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:நான்கோவிட் 19 பரிசோதனை மேற்கொண்டேன். அறிகுறி தென்பட்டுள்ளது. தற்போது நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன். இருப்பினும் தனிமைப்படுத்தி கொண்டேன்.
சமீபகாலங்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வங்கியின் துணை கவர்னர்கள், அதிகாரிகளுடன் வீடியோ கான்பரசின்சிங், மற்றும் தொலை பேசி மூலம் தொடர்புகொள்வேன். வழக்கம் போல் வங்கி பணிகள் நடைபெறும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
I have tested COVID-19 positive. Asymptomatic.Feeling very much alright.Have alerted those who came in contact in recent days.Will continue to work from isolation. Work in RBI will go on normally. I am in touch with all Dy. Govs and other officers through VC and telephone.
— Shaktikanta Das (@DasShaktikanta) October 25, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE